அகதிகளுக்கு நாட்டை திறந்துவிட்ட சுவிட்சர்லாந்து: வரலாற்றை மறந்த நாடுகள்

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

1968 ஆம் ஆண்டு சோவியத் Czechoslovakiaவை ஆக்கிரமித்தபோது ஏராளமானோர் அடைக்கலம் புகுவதற்கு தெரிந்தெடுத்த நாடு சுவிட்சர்லாந்து.

Prague Spring என்னும் இயக்கத்தை நசுக்கும் முயற்சியில் 137 குடிமக்கள் கொல்லப்பட்டனர்.

சுமார் 20,000 செக் நாட்டவர்களும் சுலோவேகியர்களும் சுவிட்சர்லாந்துக்கு குடிபெயர்ந்தனர்.

அந்த நேரத்தில் சுவிட்சர்லாந்துக்கும் திறன்மிக்க பணியாளர்கள் தேவைப்பட்டனர்.

அதற்கேற்றாற்போல் குடி பெயர்ந்தோரில் பெரும்பாலானோர் மாணவர்கள், கல்வியாளர்கள் மற்றும் தொழில் நுட்பம் அறிந்தவர்கள் என நன்கு கற்றவர்கள்.

அந்த சூழலில் சுவிட்சர்லாந்துக்கு வர முடிவு செய்த தனது விருப்பத்தை ஏற்றுக் கொண்ட தனது பெற்றோருக்கு நன்றி தெரிவிக்கும் Frantisek Pojdl என்பவர் கூறும்போது, கம்யூனிசத்தின் கீழ் விதிக்கப்பட்டிருந்த தன்னிச்சையான விதிகள் பொய் சொல்வதற்கும் ஏமாற்றுவதற்கும்தான் வழி வகை செய்தன, அதே நேரத்தில் சுவிட்சர்லாந்தின் சட்டதிட்டங்களைப் பொருத்தவரையில் நியாயமும் காலம் தவறாமையும் காணப்பட்டன, கண்டிப்பாக சட்டங்கள் கீழ்ப்படிவதற்காகத்தான் என்று மகிழ்ச்சியாக தெரிவிக்கிறார்.

பிற சோவியத் நாடுகள் அகதிகளை வரவேற்க விரும்பாததை விமர்சிக்கும் Brežná, சுவிட்சர்லாந்தில் பல்வேறு மொழிகளைக் கேட்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது, சுலோவேகியாவில் பலருக்கு வெளிநாட்டவர்களை தெரியவே தெரியாது, அவர்கள் தனித்தே இருக்க விரும்புகிறார்கள் என்கிறார்.

அன்று சுவிட்சர்லாந்து செக் குடிமக்களுக்கும் சுலோவேகியர்களுக்கும் தனது வாயிலை திறந்து விட்டது, ஆனால் இன்று அதை மறந்து விட்டன அந்த நாடுகள், ஆம், அவை இன்று வெளி உலகிலிருந்து யாரையும் தங்கள் நாடுகளுக்குள் அனுமதிப்பதில்லை.

தங்களுக்கு கடந்த காலத்தில் மற்றவர்களின் உதவி தேவைப்பட்டது என்பதை அவர்கள் மறந்து விட்டார்கள் என்கிறார் Fiona Ziegler என்னும் திரைப்படவியலாளர்.

புலம்பெயர்தலுக்கான சர்வதேச அமைப்பின் கூற்றுப்படி அந்த காலகட்டத்தில் 22 மில்லியன் மக்கள் வெவ்வேறு நாடுகளில் அடைக்கலம் புகுந்தார்கள்.

இந்த மாபெரும் இடப்பெயர்ச்சி வரலாற்றில் குறிப்பிடத்தக்க நிகழ்வு என்று அது தெரிவிக்கிறது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers