தந்தைக்கு பிரசவ விடுமுறை கோரும் சுவிட்சர்லாந்து ஆணையம்

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்திலுள்ள ஆணையம் ஒன்று குழந்தையின் தந்தைக்கும் ஒன்பதரை மாதங்கள் பிரசவ விடுப்பு அளிக்கும் திட்டம் ஒன்றை முன்வைத்துள்ளது.

இத்திட்டம் அரசுக்கு குடும்ப பிரச்சினைகள் தொடர்பாக ஆலோசனை அளிக்கும் அமைப்பான Federal Commission for the Coordination of Family Affairs (COFF) என்னும் அமைப்பினால் முன்வைக்கப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்து, குழந்தையின் தந்தைக்கும் 38 வார பிரசவ விடுப்பு அளிக்க வேண்டும் என COFF விரும்புகிறது.

இத்திட்டத்தின்படி குழந்தையின் தாய்க்கு 14 வாரங்களும் தந்தைக்கு 8 வாரங்களும் பிரசவ விடுப்பு அளிக்கப்படும்.

மீதமுள்ள 16 வார விடுப்பை பெற்றோர் தங்களுக்குள் பங்கிட்டுக் கொள்ளலாம். மேலும் தகுதியுடைய பெற்றோருக்கு சம்பளத்தின் 80 சதவிகிதம் வழங்கப்படும்.

குழந்தை பிறந்து மூன்று வருடங்களுக்குள் இந்த விடுப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். தற்போதைக்கு அம்மாக்களுக்கு 14 வாரங்கள் பிரசவ விடுப்பு அளிக்கப்படுகிறது.

தந்தையருக்கு பிரசவ விடுப்பு இல்லை. வேண்டுமென்றால் ஒன்று அல்லது இரண்டு நாட்கள் குடும்ப தின விடுப்பு எடுத்துக் கொள்ளலாம்.

இந்த நிலையில்தான் புதிய பிரசவ விடுப்பு திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது. ஆனால் அரசாங்கமோ இந்த திட்டத்தை நிராகரிக்கும்படி நாடாளுமன்றத்திற்கு பரிந்துரை செய்துள்ளது.

இத்திட்டம் நிறுவனங்களுக்கு பெரும் சுமையை ஏற்படுத்தும் என அரசு கூறியுள்ளது. சோசியலிஸ்ட் கட்சி நான்கு வார பிரசவ விடுப்பிற்கும் CVP கட்சி தந்தையர்களுக்கு இரண்டு வார விடுப்பிற்கும் ஆதரவளித்துள்ளன.

குழந்தையின் தாய்க்கு 14 வாரங்களும் தந்தைக்கு 8 வாரங்களும் பிரசவ விடுப்பு அளிக்க வேண்டும் என்ற திட்டத்தை முன்வைத்துள்ளது கிரீன்ஸ் கட்சியினர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers