சுவிட்சர்லாந்தில் லேசான நிலநடுக்கம்: அதற்குள் குவிந்த 200 தொலைபேசி அழைப்புகள்

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தின் Valais பகுதியில் உள்ளூர் நேரப்படி அதிகாலை 2.09 மணியளவில் 3.2 ரிக்டர் அளவுடைய நிலநடுக்கம் ஏற்பட்டது.

அதற்குள் அதிர்ந்துபோன மக்கள் நிலநடுக்கம் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ளும் Swiss Seismological Service (SED) அலுவலகத்தை போன் கால்களால் துளைத்தெடுத்து விட்டனர்.

Saxonஇலிருந்து ஒன்பது கிலோமீற்றர்கள் தொலைவில் நிலத்திற்கு கீழே ஏழு கிலோமீற்றர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையப்பகுதி அமைந்திருந்தது.

இந்த நிகழ்வு கீழ் வலாயிசின் Fully, Martigny மற்றும் Aigles ஆகிய பகுதிகளில் நன்கு உணரப்பட்டது.

நில நடுக்கம் ஏற்பட்டு சில நிமிடங்களுக்குள் தங்களுக்கு 200 தொலைபேசி அழைப்புகள் வந்து குவிந்து விட்டதாக SED தெரிவித்தது.

ஏற்கனவே Saxon பகுதியில் பிப்ரவரி மாதம் 2.6 ரிக்டர் அளவுள்ள ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டது.

சமீப காலமாகவே Wallis பகுதி பல நிலநடுக்கங்களை கண்டுள்ளது.

ரிக்டர் அளவில் 3க்கும் 4க்கும் இடையே ஏற்படும் நிலநடுக்கங்கள் ஆண்டுக்கு பத்து ஏற்படுகின்றன.

6க்கு மேற்பட்ட ரிக்டர் அளவுடைய வலிமையான நிலநடுக்கங்கள் 50 முதல் 150 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஏற்படுகின்றன.

இதற்குமுன் 1946ஆம் ஆண்டு Sierre பகுதியை 6.2 ரிக்டர் அளவுள்ள ஒரு நிலநடுக்கம் தாக்கியுள்ள நிலையில் அடுத்த பெரிய நிலநடுக்கம் 2040வாக்கில் ஏற்படலாம் என நிலவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்