பயங்கரவாத அச்சுறுத்தலில் சுவிஸ் பாராளுமன்றம்? பாதுகாப்பை பலப்படுத்த கோரிக்கை

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

சுவுட்சர்லாந்தின் தலைநகர் பெர்ன் நகரில் அமைந்துள்ள பாராளுமன்ற கட்டிடத்திற்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும், அதன் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் எனவும் மத்திய பொலிசார் அறிவுறுத்தியுள்ளனர்.

ஐரோப்பிய நாடுகளில் அதிகரித்துவரும் பயங்கரவாத அச்சுறுத்தலை கருத்தில் கொண்டும், சமீப காலமாக வெளிநாட்டு தலைவர்களின் வருகை அதிகரித்துள்ளதாலும் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும்ம் என சுவிஸ் பொலிஸ் தரப்பு கோரிக்கை வைத்துள்ளது.

மேலும் சுவிஸ் பாராளுமன்றத்தில் பார்வையாளர்களின் எண்ணிக்கையும் சமீப காலமாக உயர்ந்து வருகிறது. மேலும் பொதுமக்களை அனுமதிக்கும் பகுதியானது அடுத்த ஆண்டு கோடை காலத்திற்கு முன்பாக புதிப்பிக்கப்பட உள்ளது.

கூடவே பாதுகாப்பையும் அதிகரிக்க உரிய திட்டம் வகுக்க வேண்டும் என அதிகாரிகள் தரப்பு கோரியுள்ளனர்.

பாராளுமன்ற நிர்வாகம் அனுமதி அளிக்கும் எனில் அடுத்த கோடை காலத்திற்கு முன்னர் புதுப்பிக்கும் பணிகளை துவங்க உள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கென சுமார் 5 மில்லியன் பிராங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. புதுப்பிக்கப்பட்ட வாயில் வழியாக செல்லும் பார்வையாளர்களை உடனடியாக சோதனைக்கு உட்படுத்தவும், அவர்கள் பாதுகாப்பும், கட்டிட வளாகத்தின் பாதுகாப்பும் உறுதி செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்