ஜெனீவா நகரில் சிரியா அரசியலமைப்புக்கான பேச்சுவார்த்தை: ஐநாவின் சமாதான தூதர் அறிவிப்பு

Report Print Kabilan in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் சிரியாவுக்கான புதிய அரசியலமைப்பு சட்டத்தை வரையறுக்க, அடுத்த மாதம் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதாக ஐ.நா சபையின் அமைதிக்கான தூதர் அறிவித்துள்ளார்.

சிரியா போரினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2011ஆம் ஆண்டு அங்கு தொடங்கிய போரில் சுமார் 3,50,000 பேர் கொல்லப்பட்டனர்.

மேலும், மில்லியன் கணக்கான மக்கள் புலம்பெயர்ந்தனர். இதனால் அங்கு புதிய அரசியலமைப்பு சட்டத்தை கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக சிரியாவின் சார்பில் ஐ.நா சபையின் அமைதிக்கான தூதர் ஸ்டெப்ஃபான் டி மிஸ்துரா, ஜெனீவா நகரில் உள்ள ஐ.நா-வின் தலைமையகத்தில் இரண்டு நாட்கள் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக அறிவித்துள்ளார்.

செப்டம்பர் மாதம் 11 மற்றும் 12 ஆகிய திகதிகளில் நடைபெற உள்ள இந்த பேச்சுவார்த்தையில் ஈரான், ரஷ்யா மற்றும் துருக்கி ஆகிய நாடுகளின் பிரதிகள் கலந்துகொள்ள உள்ளனர்.

Yuri Kadobnov/AFP

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்