சூரிச்சில் பொலிஸ் மீது மீண்டும் தாக்குதல்: வன்முறையாளர்களில் ஒருவர் கைது

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

சூரிச்சில் இரவு ரோந்துப்பணியில் ஈடுபட்டு வந்த பொலிஸ் வாகனம் மீது வன்முறையாளர்கள் தாக்குதலில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

வன்முறையில் ஈடுபட்டவர்கள் FCZ ரசிகர்களுக்கான உடை அணிந்திருந்ததாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

மட்டுமின்றி வன்முறையாளர்களில் 24 வயதுடைய இளைஞர் ஒருவரை கைது செய்துள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

Hirschenplatz மற்றும் Rudolf Brun பாலம் அருகே கும்பல் ஒன்று தங்களுக்குள் மோதிக்கொள்வதாக வந்த தகவலை அடுத்தே பொலிசார் சம்பவப்பகுதிக்கு விரைந்துள்ளனர்.

இதில் இருவர் காயமடைந்துள்ளதாகவும், அதில் ஒருவர் படுகாயத்துடன் மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளதாகவும் பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளனர்.

கால்பந்து ரசிகர்களின் கூட்டம் ஒன்று மோதலில் ஈடுபடுவதாக பொலிசாருக்கு தகவல் வந்தவண்ணம் உள்ளது எனவும்,

Heinrichstrasse பகுதியில் மோதலில் ஈடுபட்ட கும்பலில் 4 பேரை பொலிசார் கைது செய்துள்ளதாகவும், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொலிசார் மீதும் வாகனங்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

கைதான 4 பேரிடமும் சூரிச் நகர பொலிசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஒருவாரத்திற்கு முன்னர் பொலிசார் மீதும் மருத்துவ உதவிக்குழுக்கள் மீதும் கொலைவெறித் தாக்குதல் நடந்தது ஊடகங்களில் தலைப்புச் செய்தியானது.

300 பேர் கொண்ட கும்பல் ஒன்று 50-ல் இருந்து 60 பேர் கொண்ட பொலிசாரை போத்தல்கள் மற்றும் கற்களால் கொடூரமாக தாக்கியது குறிப்பிடத்தக்கது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்