சேவையை நிறுத்திக் கொண்ட பிரபல சுவிஸ் விமான சேவை நிறுவனம்: வேலை இழந்த 100 ஊழியர்கள்

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தின் SkyWork விமான சேவை நிறுவனம் தங்கள் சேவையை திடீரென்று நிறுத்திக் கொள்வதாக அறிவித்துள்ளது வாடிக்கையாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சுவிஸ்ஸின் பெர்ன் மாகாணத்தை தலைமையிடமாக கொண்டு ஐரோப்பாவின் 22 நாடுகளுக்கு சேவை அளித்து வந்துள்ளது SkyWork விமான சேவை நிறுவனம்.

ஆனால் பொருளாதார ரீதியாக கடும் பின்னடைவை சந்தித்து வந்துள்ள குறித்த நிறுவனமானது கடந்த புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்று அதன் வாடிக்கையாளர்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

குறித்த விமான சேவை நிறுவனம் தங்கள் சேவையை நிறுத்திக் கொள்வதால் அந்த நிறுவனத்தில் பயணச்சீட்டு வாங்கியுள்ள சுமார் 11,000 பயணிகள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் விமான சேவையில் ஈடுபட்டுவரும் SkyWork நிறுவனம் தங்கள் வணிக உரிமத்தை உரிய அதிகாரிகளிடம் ஒப்படைத்துவிட்டு, திவால் நடவடிக்கைகளைத் தொடங்க உள்ளதாகவும் அறிவித்துள்ளனர்.

இதனால் குறித்த விமான சேவை நிறுவனத்தில் இதுவரை பணிபுரிந்து வந்த சுமார் 100 ஊழியர்களின் நிலை கேள்விக்குறியாக மாறும் என தெரியவந்துள்ளது.

தற்போது SkyWork நிறுவனத்தின் பயணச்சீட்டு கைவசம் வைத்திருப்பவர்களுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்து தரப்படும் என நிர்வாகம் அறிவித்துள்ளது.

SkyWork விமான சேவையானது முற்றாக நிறுத்தப்படுவதால் இனி பெர்ன் விமான நிலையமானது களை இழந்து வெறிச்சோடி காணப்படும் என வாடிக்கையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்