சுவிஸில் தொடர்ந்து அதிகரிக்கும் வெளிநாட்டினரின் குடியேற்றம்: புள்ளி விவர தகவல்

Report Print Kabilan in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தில் குடியேறும் பிற நாட்டவரின் எண்ணிக்கை அதிகரிப்பதால், அந்நாட்டின் மொத்த மக்கள் தொகையில் கால்பகுதி பேர் வெளிநாட்டினராக உள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

சுவிட்சர்லாந்தில் கடந்த ஆண்டு மட்டும் சுமார் 1,71,000 வெளிநாட்டினர் குடிபுகுந்துள்ளனர். இதனால் சுவிஸ் குடியுரிமை பெறுபவர்களின் எண்ணிக்கையை விட, குடியேறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது.

2017ஆம் ஆண்டின் இறுதியின்படி, 2.13 மில்லியன் வெளிநாட்டினர் சுவிஸில் குடியேறியதால், அந்நாட்டின் மொத்த மக்கள் தொகை 8.48 மில்லியன் என தெரிய வந்துள்ளது. இதன் மூலம், 25.1 சதவித அளவு அனைத்து வெளிநாட்டினரும் சுவிஸில் குடியேறியுள்ளதாக தெரிய வருகிறது.

இவ்வாறு குடியேறுபவர்களில் பெரும்பாலானோர் ஐரோப்பியர்கள் ஆவர். அதிலும் முக்கியமாக ஜேர்மனியர்கள் அதிகளவிலும், அதற்கு அடுத்த இடங்களில் இத்தாலியர்கள் மற்றும் போர்த்துகீசியர்களும் உள்ளனர்.

கடந்த ஆண்டு சுவிஸ் குடிமக்களில் சுமார் 45,000 பேர் இந்த புள்ளி விவர கணக்கெடுப்பில் எடுத்துக்கொள்ளப்படவில்லை. சுவிட்சர்லாந்தில் உள்ள வெளிநாட்டவர்களில் பாதிக்கும் மேலானோர் சுவிஸில் பிறந்தவர்கள் அல்லது பத்து ஆண்டுகளாக இங்கு வசிப்பவர்கள் என்று புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்