உங்கள் அன்புக்குரியவர்களை நீங்கள் யாரும் இனி பார்க்க மாட்டீர்கள்: சுவிஸ் விமான விபத்தின் நினைவலைகள்

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து
281Shares
281Shares
lankasrimarket.com

20 ஆண்டுகளுக்குமுன் சுவிட்சர்லாந்து விமானமான Swissair Flight 111 Nova Scotia பகுதியில் கடலில் விழுந்ததில் அதில் பயணித்த 229 பேரும் உருக்குலைந்து போனார்கள்.

உடல்களை அடையாளம் காண வேண்டிய பொறுப்பு Dr. John Butt என்னும் மருத்துவர் கையில் ஒப்படைக்கப்பட்டது. ராணுவமும், கனேடிய பொலிசாரும் உள்ளூர் தன்னார்வலர்களும் உடல் பாகங்களை மீட்கும் நடவடிக்கையில் இறங்கினார்கள்.

ஆனால் அதிர்ச்சியளிக்கும் வகையில் 229 உடல்களில் ஒரே ஒரு உடல் மட்டுமே அடையாளம் காணக்கூடிய அளவில் முழுமையாக கிடைத்தது.

DNA சோதனை, கைரேகைகள் மற்றும் பற்களின் அடிப்படையில் உடல் பாகங்களை அடையாளம் காணும் முயற்சியில் மருத்துவர்கள் இறங்கினார்கள்.

பின்னர் உறுப்புகளை X-ரே எடுத்து அதன் உதவியால் உடல் பாகங்களை அடையாளம் காண முயன்றார்கள்.

கடைசியாக 1988ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 11ஆம் திகதி அத்தனை உடல்களும் அடையாளம் காணப்பட்டன.

உயிரிழந்த உறவினர்கள் குறித்து தகவலறிய மக்கள் ஆவலுடன் Dr. Johnக்காக காத்திருந்தார்கள்.

20 ஆண்டுகளுக்குப்பின் அந்த சம்பவத்தை நினைவு கூறுகிறார் Dr. John. நான் அவர்களிடம் என்ன கூறப்போகிறேன் என்பது எனக்கே புரியவில்லை.

என்னிடம் அவர்களுக்கு கூறுவதற்கு ஒரே விடயம் தான் இருந்தது.

உங்களில் யாரும் உங்கள் அன்புக்குரியவர்களை மீண்டும் பார்க்க மாட்டீர்கள் என்பதை கூறுவது எனக்கு வருத்தமளிக்கிறது என்பதுதான் அது, அந்த அறையில் அடுத்து என்ன நிகழுமோ என அஞ்சி நின்றார் Dr. John.

ஆனால் மூன்று அல்லது நான்கு பேர் மட்டுமே சத்தமிட்டு கதறி அழுதார்கள், மீதமுள்ள அத்தனை பேரும் அப்படியே அமைதியாக உட்கார்ந்திருந்தார்கள்.

அவர்கள் அத்தனை துக்கத்தைத் தாங்கிக் கொண்டு அமைதியாக அமர்ந்திருக்க அவர்களுக்கு எவ்வளவு மன உறுதி தேவைப்பட்டிருக்கும் என்று நான் நினைத்தேன் என்கிறார் Dr. John.

அவர்களது நினைவிடத்தில் பொறிக்கப்பட்டுள்ள 229 பேரின் பெயர்களை நான் இப்போதும் வாசிக்கிறேன்.

அங்கு வைக்கப்பட்டுள்ள நினைவுப் பொருட்களையும் பார்க்கிறேன்.

ஒவ்வொரு முறை இதை செய்து முடிப்பதற்கும் எனக்கு 15 முதல் 30 நிமிடங்கள் ஆகின்றன, அதற்குப்பிறகே நான் அங்கிருந்து நகர்கிறேன் என்கிறார் Dr. John.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்