சுவிஸில் பேருந்து படிக்கட்டில் அமர்ந்து பயணம் செய்த பெண் அமைச்சர்! குவியும் பாராட்டு

Report Print Kabilan in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தின் போக்குவரத்து துறை பெண் அமைச்சர் ஒருவர், பேருந்து படிக்கட்டில் அமர்ந்து பயணம் செய்த விடயம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

சுவிட்சர்லாந்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருப்பவர் டோரிஸ் லூதார்டு.

இவர் கடந்த வெள்ளிக்கிழமை, சூரிச் நகரில் நடைபெற இருந்த அரசியல் தொடர்பான நிகழ்ச்சி ஒன்றிற்கு செல்ல, இரண்டு அடுக்கு பேருந்து ஒன்றில் பயணம் செய்துள்ளார்.

அப்போது பேருந்தில் இட நெருக்கடி இருந்ததால் டோரிஸ் படிக்கட்டிலேயே அமர்ந்து பயணம் செய்தார். இது தொடர்பான புகைப்படத்தை ஊடகம் ஒன்று தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டது.

அத்துடன் லூதார்ட்டின் இந்த எளிமை மிகவும் விரும்பத்தக்கது என்று குறிப்பிட்டிருந்தது. இதனால் சமூக வலைதளங்கள் மற்றும் ஊடகங்களில் இந்த புகைப்படம் வேகமாக பரவியது.

அதனைத் தொடர்ந்து, பலர் அமைச்சரின் எளிமையான இந்த செயலை பாராட்டினர். எனினும் ஒரு சாரார் டோரிஸ் லூதார்டு தகவல் தொடர்பு அமைச்சராகவும் இருப்பதனால், ஊடகங்களின் கவனத்தை ஈர்க்க இவ்வாறு செய்திருக்கலாம் என கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers