போர் குற்றவாளிகள் மீதான வழக்குகளை கைவிடும் சுவிஸ் அரசு: வெளியான காரணம்

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து
272Shares
272Shares
lankasrimarket.com

சுவிட்சர்லாந்தில் போர் குற்றவாளிகள் மீதான வழக்குகளில் போதிய ஆதாரங்கள் இல்லை என்பதால் பல முக்கிய வழக்குகளையும் கைவிட அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சுவிஸ்ஸில் கடந்த 2012 ஆம் ஆண்டில் இருந்தே போர் குற்றவாளிகள் தொடர்பான 50-கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகி வந்தன.

இந்த வழக்குகள் தொடர்பில் இதுவரை எந்த அறிகுறிகளும் வெளியாகவில்லை என்பது மட்டுமல்ல விசாரணை முடித்து தண்டனை அறிவிக்கப்பட்டதாகவும் தகவல் இல்லை.

பெரும்பாலான வழக்குகளை சுவிஸ் நீதித்துறை கைவிட்டதாகவும், போதிய ஆதாரமின்மையே காரணம் எனவும் கூறப்படுகிறது.

தற்போது 13 வழக்குகள் விசாரணையில் இருப்பதாகவும், இதில் சிரியா, ஈராக், போஸ்னியா, புருண்டி மற்றும் சூடான் ஆகிய நாட்டவர்களுக்கு எதிரான வழக்குகள் என கூறப்படுகிறது.

சுமார் 4 ஆண்டுகள் நீண்ட விசாரணைக்கு பின்னர் முன்னாள் லைபீரிய எழுச்சித் தலைவர் தொடர்பான வழக்கில் அவருக்கு எதிராக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

சுவிஸ் அரசு மட்டுமல்ல பெரும்பாலான நாடுகள் போர் குற்றவாளிகள் தொடர்பில் விசாரணை மேற்கொள்வதில் மெத்தனப்போக்கே கடைபிடித்து வருவதாக கூறப்படுகிறது.

ஸ்வீடன் நாட்டில் போர் குற்றவாளிகள் தொடர்பில் 80 வழக்குகள் விசாரணையில் இருப்பதாகவும், அதில் 4 வழக்குகளில் மட்டுமே இதுவரை தண்டனை தீர்ப்பு வெளியிட்டுள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்