பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டவர் எந்த வயதினரானாலும் புகாரளிப்பது கட்டாயம்: சுவிஸ் கத்தோலிக்க திருச்சபை

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

கத்தோலிக்க திருச்சபைகளில் குழந்தைகள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டால் புகாரளிப்பது கட்டாயம் என்னும் விதி ஏற்கனவே நடப்பில் இருக்கையில் இனி வயது வந்தவர்கள் துஷ்பிரயோகம் செய்யப்பட்டாலும் புகாரளிப்பது கட்டாயமாக்கப்படுகிறது.

நேற்று நடைபெற்ற சுவிஸ் பிஷப்களின் மாநாட்டில் கத்தோலிக்க சபைகளில் இனி வயது வந்தவர்கள் துஷ்பிரயோகம் செய்யப்பட்டாலும் கட்டாயம் புகாரளிக்க வேண்டும் என முடிவு செய்துள்ளது.

அதுபோல புகாரளிப்பதற்கு இனி பாதிக்கப்பட்டவரின் அனுமதியும் தேவையில்லை. சபையின் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதி ஒருவர், நீதியின் முன் கொண்டுவரப்பட வேண்டிய அளவில் ஒரு பாலியல் ரீதியான தவறு நடந்துள்ளது என்னும் சந்தேகம் ஏற்படும் பட்சத்தில், பாதிக்கப்பட்டவர் சம்மதிக்காவிட்டாலும் கூட அதை அதிகாரத்திலுள்ளவர்களிடம் தெரிவிக்க வேண்டியது அவரது கடமையாகும் என மாநாட்டின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

இதுவரை பாதிக்கப்பட்டவர் சம்மதித்தால் மட்டுமே புகாரளிப்பது வழக்கமாக இருந்தது.

சமீபகாலமாக கத்தோலிக்க திருச்சபை தொடர்ந்து பாலியல் புகார்களால் தாக்கப்பட்டு வருகிறது.

கடந்த ஆண்டில் சுவிட்சர்லாந்தில் மட்டும் 65 பாலியல் புகார்கள் அளிக்கப்பட்டன. 2010 முதல் இதுவரை 300 பாலியல் புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன.

பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் 16 வயதுக்குட்பட்டவர்கள், 52 பேர் வயது வந்த பெண்கள் மற்றும் 46 பேர் வயது வந்த ஆண்கள்.

இதில் வருந்தத்தக்க விடயம் என்னவெனில் அந்த புகார்களில் பல நடவடிக்கை எடுக்கும் காலத்தை கடந்துவிட்டன அல்லது தவறு செய்தவர்கள் பலர் இறந்துவிட்டனர் என்பதுதான்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers