சுவிஸ் கர்ப்பிணி பெண்களிடம் அதிகரிக்கும் மதுப்பழக்கம்: எச்சரிக்கும் பொது சுகாதாரத்துறை

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தில் பொது சுகாதாரத்துறையின் கோரிக்கையை ஏற்று கர்ப்பிணி பெண்களில் மூன்றில் ஒருவர் மட்டுமே மதுப்பழக்கத்தை கைவிடுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சுவிஸ்ஸில் பிறக்கும் குழந்தைகளின் நலன் கருதி கர்ப்பிணி பெண்கள் மதுப்பழக்கத்தை கைவிட வேண்டும் என பொது சுகாதாரத்துறை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

ஆனால் பெரும்பாலான பெண்கள் அதை கண்டுகொள்வதில்லை எனவும் மூன்றில் ஒருவர் மட்டுமே கர்ப்ப காலத்தில் மதுப்பழக்கத்தை கைவிடுவதாகவும் ஆய்வு ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது.

சுவிஸ்ஸில் உள்ள சுமார் 6 சதவிகித கர்ப்பிணி பெண்கள் மாதம் ஒருமுறையேனும், ஒரு நிகழ்வில் நான்கு கிளாஸ் அல்லது அதற்கும் அதிகமாக மது அருந்துவதாக தெரியவந்துள்ளது.

இது கர்ப்பிணி பெண்களை பொறுத்தமட்டில் அதிகபட்சம் என கூறப்படுகிறது. மட்டுமின்றி பிறக்கும் குழந்தைகளுக்கு இது கடும் சிக்கலை ஏற்படுத்தும் எனவும் அரசு பொது சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும், சமீபத்திய ஆய்வு ஒன்றில் சுவிஸ்ஸில் பிறக்கும் சுமார் 2 சதவிகித குழந்தைகள் மது தொடர்பான குறைபாடுகளுடன் பிறப்பதாகவும் தெரியவந்துள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers