பிரித்தானிய நச்சுப்பொருள் தாக்குதலில் சுவிட்சர்லாந்தின் பங்கு: அதிர்ச்சித் தகவல்

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

பிரித்தானியாவின் சாலிஸ்பரியில் நடைபெற்ற நச்சுப்பொருள் தாக்குதலில் ஈடுபட்டதாக கருதப்படும் இருவர் குறைந்தபட்சம் ஆறு முறையாவது ஜெனீவாவுக்கு பயணம் செய்துள்ளதாக வந்துள்ள தகவலையடுத்து அவர்களுக்கும் சுவிட்சர்லாந்திற்கும் என்ன தொடர்பு என்ற கோணத்தில் பிரித்தானிய அதிகாரிகள் விசாரணையை விரிவுபடுத்தியுள்ளனர்.

முன்னாள் ரஷ்ய உளவாளியான Sergei Skripal மற்றும் அவரது மகள் Yulia ஆகியோர்மீது நச்சுப்பொருள் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தில் தொடர்புடையதாக கருதப்படும் Alexander Petrov மற்றும் Ruslan Boshirov ஆகிய ரஷ்ய ராணுவ உளவாளிகளான இருவர் ஜெனீவாவில் மிக நீண்ட காலம் தங்கியதாக சுவிட்சர்லாந்தின் பிரபல பத்திரிகைகள் இரண்டு செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த செய்தியை பெயர் வெளியிடக்கூடாது என்னும் கண்டிஷனின் பேரில் சுவிட்சர்லாந்து மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த பலர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

பிரித்தானிய அதிகாரிகள் சுவிஸ் உளவுத்துறையுடன் இணைந்து Petrov மற்றும் Boshirov ஆகியோர் சுவிட்சர்லாந்தில் என்ன செய்தார்கள் என்னும் கோணத்தில் விசாரணையை மேற்கொண்டு வருவதாக அந்த பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.

அந்த பத்திரிகைகள் பிரபல பிரித்தானிய பத்திரிகை ஒன்று வெளியிட்டுள்ள செய்தி ஒன்றையும் மேற்கோள் காட்டியுள்ளன.

அந்த பிரித்தானிய பத்திரிகை சாலிஸ்பரி தாக்குதலுக்கு முன் Petrov மற்றும் Boshirov இருவரும் ஐரோப்பா முழுவதையும் சுற்றியதையும், நவம்பர் 2017க்கும் பிப்ரவரி 2018க்கும் இடையில் ஜெனீவாவிலிருந்தும், ஜெனீவாவுக்கும் பயணம் செய்ய

ஒன்பது வெவ்வேறு விமானங்களில் முன்பதிவு செய்ததையும் மாஸ்கோவிலிருந்து பாரீஸ் வழியாக பயணப்பட்டதையும் குறித்து விவரமாக செய்தி வெளியிட்டுள்ளது.

முன்னாள் ரஷ்ய உளவாளியான Sergei Skripal மற்றும் அவரது மகள் Yulia ஆகியோர் மீது மார்ச் மாதம் 4ஆம் திகதி நச்சுப்பொருள் தாக்குதல் நிகழ்த்தப்பட்டது.

பல வாரங்கள் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டதற்குப் பின் அவர்கள் இருவரது உடல் நிலையிலும் முன்னேற்றம் ஏற்பட்டது.

மேற்கத்திய நாடுகளுக்கும் ரஷ்யாவுக்கும் இடையேயான உறவில் பெரும் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய இந்த வழக்கு பல்வேறு நாடுகளில் விசாரிக்கப்பட்டு வருகிறது.

ஆனால் இன்னும் ரஷ்யா தனக்கும் இந்த சம்பவத்திற்கும் தொடர்பில்லை என்றே மறுப்பு தெரிவித்து வருகிறது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்