நடிகை ஸ்ரீதேவியை கவுரவிக்கும் சுவிட்சர்லாந்து அரசு

Report Print Deepthi Deepthi in சுவிற்சர்லாந்து

மறைந்துபோன நடிகை ஸ்ரீதேவிக்கு சுவிட்சர்லாந்து நாட்டில் சிலை நிறுவ அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.

ஸ்ரீதேவி நடித்து 1989-ல் வெளியான இந்தி படம், ’சாந்தினி’. சுவிட்சர்லாந்தை மையப்படுத்தி இதன் கதை அமைக்கப்பட்டிருந்தது.

பாடல் காட்சிகளும் பெரும்பாலான வசன காட்சிகளும் அந்நாட்டின் சுற்றுலா தளங்களில் படமாக்கப்பட்டிருந்தன. நாட்டின் சுற்றுலாவுக்கு இந்தப் படம் உதவியதால் அதிகமான எண்ணிக்கையில் இந்தியர்கள் அங்கு வருகிறார்களாம். இதையடுத்து அவருக்கு அங்கு சிலை நிறுவ முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் மறைந்த ஸ்ரீதேவியை கவுரவிக்கும் விதமாக அங்கு சிலை நிறுவப்பட இருக்கிறது.

கடந்த பிப்ரவரி மாதம் துபாயில் நடந்த திருமண விழா ஒன்றில் பங்கேற்க குடும்பத்துடன் சென்ற ஸ்ரீதேவி ராஸ் அல் கைமா நகரில் உள்ள ரிசார்ட்டில் தங்கியிருந்தார். இந்நிலையில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு அவர் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்