சுவிஸ் நபரை அதிர வைத்த கொள்ளை சம்பவம்

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

தென்கிழக்கு புளோரிடாவில் உள்ள மியாமி கடற்கரைக்கு சுற்றுலா சென்ற சுவிஸ் நபர் ஒருவர் தமது விலை உயர்ந்த கடிகாரத்தை பறிகொடுத்த சம்பவம் ஒன்று நடந்துள்ளது.

சுவிஸ் நபர் ஒருவர் 10 நாட்கள் விடுமுறையை கழிக்கும் பொருட்டு தென்கிழக்கு புளோரிடாவில் உள்ள மியாமி கடற்கரைக்கு சுற்றுலா சென்றுள்ளார்.

ஆனால் முதல் நாளிலேயே தமது மொத்த மகிழ்ச்சியும் தொலைந்தது என அவர் தெரிவித்துள்ளார். 14,000 பிராங்குகள் விலை கொண்ட Rolex கடிகாரம், கைவசம் இருந்த 2,000 டொலர் பணம் மற்றும் அலுவலகம் தொடர்பான மொபைல் ஒன்றும் களவு போயுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

செவ்வாய் அன்று மாலை தமது நண்பர்களுடன் குறித்த நபர் உணவருந்த ஹொட்டல் ஒன்றுக்கு சென்றுள்ளார்.

அங்கிருந்து அருகாமையில் உள்ள இரவு விடுதிக்கும் சென்றுள்ளனர். அப்போது இவரை அணுகிய பெண் ஒருவர், வாருங்கள் உங்கள் அறைக்கே சென்று மது அருந்தலாம் என அழைத்துள்ளார்.

அவரது நிர்பந்தம் காரணமாக இருவரும் சுவிஸ் நபர் தங்கியிருக்கும் குடியிருப்புக்கு சென்றுள்ளனர்.

அங்கே அதிகமான பணம் இருப்பதை அறிந்த அந்த பெண்மணி, குறித்த சுவிஸ் நபருக்கு கிண்ணத்தில் கொஞ்சம் மது வழங்கியுள்ளார்.

அந்த மதுவரை பருகிய சுவிஸ் இளைஞர் அடுத்த சில நிமிடங்களில் மயக்கமிட்டு சரிந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து 5 மணி நேரத்திற்கு பின்னர் கண் விழித்த அவர் தமது கடிகாரம், பணம் மற்றும் மொபைல் ஆகியவை களவு போனதை அறிந்துள்ளார்.

இதனையடுத்து நடந்த சம்பவத்தை பொலிசாருக்கு புகாராக அளித்துள்ளார். களவு போன தமது பொருட்கள் எதுவும் திரும்ப கிடைப்பதில்லை, ஆனால் இதுபோன்ற கொள்ளை சம்பவங்கள் இனி ஒருவருக்கும் ஏற்பட கூடாது என்பதாலையே புகார் அளித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers