சுவிட்சர்லாந்துக்கு ஐ.நா மன்றம் கடும் கண்டனம்

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தில் இருந்து எரித்திரியா நாட்டவரை வெளியேற்றும் நடவடிக்கைக்கு ஐக்கிய நாடுகள் மன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

சித்திரவதை முகாமில் இருந்து தப்பிய எரித்திரியா நாட்டவரை மீண்டும் இத்தாலிக்கே நாடுகடத்தும் சுவிட்சர்லாந்தின் நடவடிக்கை மிகவும் கண்டனத்துக்கு உரியது என கூறிய ஐ.நா மன்றம்,

உரிய விசாரணை மேற்கொள்ளாமல் சுவிட்சர்லாந்தின் இந்த நடவடிக்கை அபாயகரமானது எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.

கடந்த 2015 ஆம் ஆண்டு எரித்திரியா நாட்டவர் புகலிடம் கோரி சுவிட்சர்லாந்தில் விண்ணப்பித்துள்ளார்.

ஆனால் டப்ளின் ஒழுங்குமுறையை சுட்டிக்காட்டி சுவிஸ் நிர்வாகம் குறித்த எரித்திரியா நாட்டவரின் விண்ணப்பத்தை நிராகரித்துள்ளது.

இதனிடையே மத்திய நிர்வாக நீதிமன்றத்தில் இருமுறை முறையீடு மேற்கொண்டதன் அடிப்படையில் எரித்திரியா நாட்டவரை வெளியேற்றும் நடவடிக்கைக்கு தடை விதிக்கப்பட்டது.

மட்டுமின்றி எரித்திரியா நாட்டவரின் வழக்கை மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers