வளர்ந்த பிள்ளைகள் பெற்றோருடன் இருக்கக்கூடாது: சுவிஸ் நாடாளுமன்றம் அதிரடி

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

பிள்ளைகள் வளர்ந்து 25 வயது ஆகும்வரையில், அவர்கள் படிப்பை முடித்து விட்டால்கூட பெற்றோர்கள் அவர்களது பொருளாதாரத் தேவைகளை பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும் எனக் கோரும் மசோதா ஒன்றை சுவிஸ் நாடாளுமன்றம் நிராகரித்து விட்டது.

அரசாங்கம் இந்த மசோதாவிற்கு ஆதரவு தெரிவித்திருந்த நிலையிலும் செனட் இந்த மசோதாவை ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டது.

சுவிட்சர்லாந்தின் தற்போதைய சட்டத்தின்படி பிள்ளைகள் படித்து முடிக்கும் வரையில் பெற்றோர்கள் அவர்களுக்கு பொருளாதார ரீதியாக ஆதரவளிக்க வேண்டும்.

ஆனால் பிள்ளைகள் படித்து முடித்தாலும், 25 வயது வரையில் அவர்களை பெற்றோர் கவனித்துக் கொள்ள வேண்டும் என்று கோரி முன் வைக்கப்பட்ட கோரிக்கை தோல்வியடைந்து விட்டது.

120,000 சுவிஸ் ஃப்ராங்குகள் வருமானம் உள்ள துணையைப் பிரிந்து வாழும் பெற்றோரில் ஒருவர் அல்லது 180,000 சுவிஸ் ஃப்ராங்குகள் வருமானம் உள்ள ஒரு தம்பதியர் மட்டும், வேண்டுமானால் தேவையிலிருக்கும் தங்கள் பிள்ளைகளுக்கு உதவிக் கொள்ளலாம்.

இது போன்ற சம்பவம் நடப்பது உலகில் சுவிட்சர்லாந்தில் மட்டுமல்ல, ஏற்கனவே அமெரிக்காவிலும் நடந்துள்ளது.

30 வயது மகன் ஒருவன் தங்களுடனேயே இருப்பதாகவும், அவனை வீட்டை விட்டு வெளியேறச் சொல்லுமாறும் ஒரு பெற்றோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

நீதிபதியும் பெற்றோரின் கோரிக்கையை ஏற்று மகனை வீட்டை விட்டு வெளியேற உத்தரவிட்டு நோட்டீஸ் அனுப்பியது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சுவிஸ் வங்கிகள் கூட்டமைப்பும், பெரும்பாலான சுவிஸ் இளைஞர்கள் தங்கள் சொந்தக்காலில் நிற்கும் தகுதியுடையவர்கள்தான் என்றும் தங்கள் நிதி நிலைமையை மேலாண்மை செய்யும் திறனும் அவர்களுக்கு உள்ளது என்றும் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers