சுவிட்சர்லாந்தில் எதிர்காலத்தில் பனிச்சறுக்கு விளையாட்டுகள் இல்லாத நிலை? எச்சரிக்கும் ஆய்வு

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

பனிச்சறுக்கு விளையாட்டுகளுக்கு பேர் போன சுவிட்சர்லாந்தில் எதிர்காலத்தில் பனிச்சறுக்கு விளையாட்டுகள் இல்லாத ஒரு நிலை உருவாகலாம் என புதிய ஆய்வு ஒன்று எச்சரிக்கிறது.

20 ஆண்டுகளாக ஏராளமான அளவு பனிப்பரப்பை சுவிட்சர்லாந்து இழந்து வருகிறது. 2017, 18ஆம் ஆண்டுகளில் கணிசமான அளவில் சுவிஸ் மலைப்பகுதிகளில் பனிப்பொழிவு இருந்தாலும், சுவிட்சர்லாந்து வேகமாக பனிப்பரப்பை இழந்து வருவதாகவும் புவி வெப்பமயமாதல் இதற்கு காரணமாக இருக்கலாம் என்றும் சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

1995 முதல் 2005 வரையிலான இருபது ஆண்டு காலகட்டத்தில் சுவிட்சர்லாந்தின் மூன்றில் ஒரு பகுதியில் மிகக் குறைந்த அளவு பனிப்பொழிவு காணப்பட்டது (36 சதவிகிதம்).

இது 2005 முதல் 2017 வரையிலான காலகட்டத்தில் 44 சதவிகிதமாக அதிகரித்தது. அது கிட்டத்தட்ட 5,200 சதுர கிலோமீற்றர்கள், அல்லது வலாயிஸ் கேண்டன் அளவுடையது.

ஜெனீவா பல்கலைக்கழகம் மற்றும் ஐக்கிய நாடுகள் சார்பில் அமைக்கப்பட்டுள்ள சுற்றுச்சூழல் தரவு மையம் சுவிட்சர்லாந்தின் சேட்டிலைட் புகைப்படங்களை ஆய்வு செய்ததன் அடிப்படையில் இந்த முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

அதேபோல் எப்போதும் வழக்கமாக 80 முதல் 100 சதவிகிதம் பனி பொழியும் பகுதிகளும்கூட 1995 முதல் 2005 வரை 27 சதவிகிதமாக இருந்தது 2005 முதல் 2017 வரையிலான காலகட்டத்தில் 23 சதவிகிதமாக சுருங்கி விட்டது.

இது கிட்டத்தட்ட 2,100 சதுர கிலோமீற்றர்கள், அல்லது ஜெனீவா கேண்டனைவிட ஏழு மடங்கு அதிகமாகும்.

இந்த மாற்றம், சுற்றுலா மூலமாக வரும் வருவாயில் இழப்பை ஏற்படுத்தும் என்பது மட்டுமல்லாமல், பனியானது குளிர்காலத்தில் தண்ணீரை உறையச் செய்து சேமிக்கவும் பின்னர் இள வேனிற்காலம் மற்றும் கோடைக்காலத்தில் பயன்பாட்டுக்கு எடுத்துக் கொள்ளவும் உதவும் என்பதால், குடிநீர் பிரச்சினைகள் மற்றும் வெள்ள அபாயம் சார்ந்த பிரச்சினைகளுக்கும் வழிவகுக்கலாம் என அஞ்சப்படுகிறது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers