ஜேர்மனியில் வாடகை கார் பயன்படுத்தும் சுவிஸ் மக்களுக்கு எச்சரிக்கை

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

ஜேர்மனியில் உரிய முறைப்படி பதிவு செய்யாமல் குறைந்த கட்டணத்தில் வாடகை கார்களை பயன்படுத்தும் சுவிஸ் நாட்டவர்களுக்கு சிக்கல் ஏற்படலாம் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

ஜேர்மனியில் வாரத்திற்கு சுமார் 400 முதல் 500 பிராங்குகள் கட்டணத்தில் வாடகை கார்களை பயன்படுத்தும் வசதி புழக்கத்தில் உள்ளன.

இருப்பினும் சுவிஸ் எல்லையில் அமைந்திருக்கும் ஜேர்மன் நகரங்களான Weil am Rhein அல்லது Lörrach பகுதிகளில் குறைந்த கட்டணத்தில் வாடகைக்கு கார்கள் கிடைக்கின்றன.

இது சுமார் 40 சதவிகிதம் குறைந்த கட்டணம் என்பதால் பொதுவாக சுவிஸ் மக்கள், குறிப்பிட்ட எல்லை நகரங்களில் இருந்தே கார்களை வாடகைக்கு எடுக்கின்றனர்.

ஆனால் உரிய ஆவணங்கள் ஏதும் இந்தவகை கார்களில் இருப்பதில்லை எனவும், இதனால் சுவிஸ் நாட்டவர்கள் ஜேர்மனியில் சட்டச்சிக்கலுக்கு உள்ளாகும் நிலை ஏற்படலாம் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ள அதிகாரிகள், வாடகை கார் தொடர்பான ஆவணங்களை பதிவு செய்வது இலவசம் என்றாலும், பொதுவாக அதற்கு மக்கள் முயற்சி மேற்கொள்வதில்லை என்றனர்.

மேலும் 8 நாட்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் இந்த வாடகை கார்களை, உரிய காலத்துக்குள் குறிப்பிட்ட நிறுவனங்களிடம் ஒப்படைக்க வேண்டும்.

தவறும் வெளிநாட்டவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் எனவும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

மட்டுமின்றி கார்களை வாடகைக்கு பெறும் நிறுவனத்திடம் இருந்து தேவையான அனைத்து ஆவணங்களையும் கேட்டுப் பெற வேண்டும் எனவும், இதுவும் வெளிநாட்டவர்களுக்கு ஜேர்மனியில் சிக்கலை ஏற்படுத்தலாம் என எச்சரிக்கின்றனர்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers