சுவிஸ் மக்களின் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கவிருக்கும் மருத்துவ காப்பீடு

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

மருத்துவக் காப்பீடு பிரீமியத்தில் 2019ஆம் ஆண்டு செய்யப்படவிருக்கும் மாற்றங்கள், சுவிஸ் மக்களின் இரத்த அழுத்தத்தையும் ஒருவேளை அதிகரிக்கலாம்.

சுவிட்சர்லாந்து முழுவதும் மருத்துவக் காப்பீடு பிரீமியம் கடந்த ஆண்டு இருந்ததைக் காட்டிலும் சராசரியாக 1.2 சதவிகிதம் அதிகரிக்க இருக்கிறது.

என்றாலும் இந்த மாற்றம் எல்லா மாகாணங்களுக்கும் ஒரே மாதிரியாக இருக்காது. மிக அதிகம் பாதிக்கப்படப்போவது Valais பகுதியைச் சேர்ந்தவர்கள், அவர்களுக்கு பிரீமியம் தொகை 3.6% அதிகரிக்கப்போகிறது.

Neuchâtel பகுதிக்கு பிரீமியம் தொகை 3.1 சதவிகிதம் அதிகரிக்கப்போகிறது,Appenzell Inherrhoden பகுதிக்கு 1.5 சதவிகிதம் குறையப்போகிறது,Uri பகுதிக்கு 1.5 சதவிகிதம் குறையப்போகிறது, Zug பகுதிக்கு எந்த மாற்றமும் இல்லை. இதுபோக Vaud போன்ற பகுதிகளில் வசிப்பவர்களுக்கு பிரீமியம் 1.2 சதவிகிதம் அதிகரிக்கப்போகிறது.

சட்டத்தில் செய்யப்பட்டுள்ள மாற்றங்களின்படி, 19 வயதுக்கும் 25 வயதுக்கும் இடையே உள்ளவர்களின் காப்பீட்டு பிரீமியம் தொகை குறைய இருக்கிறது. 19 வயதுக்கு கீழுள்ளவர்களுக்கும் 25 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் பிரீமியம் தொகை அதிகரிக்க உள்ளது.

சுவிட்சர்லாந்தில் மருத்துவக் காப்பீடு கட்டாயம் என்பதால், இந்த செலவை தவிர்ப்பது இயலாத காரியம்.

நேரடியாக ஸ்பெஷலிஸ்டுகளிடமும் பார்மசிக்களுக்கும் செல்வதற்கு பதிலாக தங்கள் குடும்ப மருத்துவரை அணுகுபவர்களுக்கு சில காப்பீட்டு நிறுவனங்கள் குறைந்த செலவு வைக்கும் திட்டங்களை வழங்குகின்றன.

இந்த புதிய செலவீனத்திற்கு தப்ப வேண்டுமானால் ஒன்று செய்யலாம், தங்கள் வருமானத்திற்கேற்றாற்போல் தாங்கள் வாழும் மாகாணங்களை மாற்றிக்கொள்லலாம். உதாரணமாக Vaud பகுதியில் வசிப்பவர்கள் Appenzell Inherrhoden பகுதிக்கு குடிபெயரலாம்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers