பிரித்தானிய பொலிசாரால் தேடப்படும் சுவிஸ் இளைஞர்

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து
179Shares
179Shares
ibctamil.com

பாலியல் பலாத்கார வழக்கில் தொடர்புடைய சுவிஸ் இளைஞரை பிரித்தானியாவின் பிரைட்டன் நகர பொலிசார் தேடி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தெற்கு இங்கிலாந்தில் உள்ள பிரைட்டன் நகரில் கடந்த 2- ஆம் திகதி நடந்த பாலியல் பலாத்கார வழக்கில் தொடர்புடைய சுவிஸ் நாட்டவரை பொலிசார் தேடி வருகின்றனர்.

சம்பவத்தன்று இரவு விடுதிக்கு சென்றுவிட்டு காலையில் கடற்கரை செல்லும் பாதையில் நடந்து சென்றுள்ளார்.

இந்த நிலையிலேயே 23 வயதான அந்த இளம் பெண்ணிற்கு பாலியல் பலாத்காரம் நடந்துள்ளது. சம்பவத்தை அடுத்து அவர் மீண்டும் விடுதிக்கே திரும்பியுள்ளார்.

அதன்பின்னர் பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பில் விசாரணை மேற்கொண்டுவரும் பொலிசார், சுவிஸ் இளைஞரின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.

மேலும் குறித்த சம்பவம் நடைபெறும்போது நபர் ஒருவர் அப்பகுதியில் இருந்ததாகவும், அவரையும் பொலிசார் தேடி வருகின்றனர்.

தற்போது மாயமாகியுள்ள சுவிஸ் இளைஞர் தொடர்பில் தகவல் தெரியவரும் பொதுமக்கள் பொலிசாரை தொடர்புகொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்