இரண்டு நாட்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட நபர்: என்ன தவறு செய்தார் தெரியுமா?

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து
361Shares
361Shares
ibctamil.com

சுவிட்சர்லாந்தில் ஒரு நபருக்கு இரண்டு நாட்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது, அவர் செய்த தவறு குப்பை விதிகளை மீறியதற்கான அபராதத்தை செலுத்தத் தவறியது.

அந்த 33 வயது நபர் தவறான நாளில் குப்பை கவரை தெருவில் வைத்ததோடு அதன் மீது ஒட்ட வேண்டிய முனிசிபல் வரி ஸ்டிக்கரையும் ஒட்டவில்லை.

வழக்கமாக குப்பை எடுக்க வருபவர்கள் அந்த நபரை அடையாளம் கண்டு பிடித்து அவருக்கு 150 சுவிஸ் ஃப்ராங்குகள் அபராதம் விதித்தனர்.

ஆனால் Biel/Bienne நகரைச் சேர்ந்த அந்த நபர் அந்த அபராதத்தை செலுத்தவேயில்லை. அதுமட்டுமின்றி அவர் சிறைக்கு செல்வதும் எப்போது என்று தெரியவில்லை, காரணம், அவர் தலைமறைவாகிவிட்டார்.

அவர் எங்கு இருக்கிறார் என்றே தெரியவில்லை. Biel/Bienne நகரில் கடந்த ஆண்டில் மட்டும் முறையாக குப்பையை கொட்டாததற்காக 209 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதோடு 600 பேருக்கு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்