சூரிச்சில் இனவெறித்தாக்குதலுக்கு ஆளான கருப்பினப் பெண்: நிறுவனம் எடுத்த நடவடிக்கை

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து
331Shares
331Shares
ibctamil.com

சூரிச்சில் உள்ள மெக் டொனால்ட் உணவகம் ஒன்றில் ஒரு கருப்பினப்பெண் இன ரீதியாக சொற்களால் தாக்கப்பட்டார்.

36 வயதுடைய அந்த பெண் உணவுக்கு ஆர்டர் கொடுத்து முடிந்ததும், தன்னிடம் கேஷ் வவுச்சர்கள் இருப்பதாகத் தெரிவித்தார்.

இதனால் கோபமடைந்த அந்த ஊழியர் ஆர்டர் கொடுப்பதற்கு முன்பே ஏன் வவுச்சர்கள் இருப்பதைத் தெரிவிக்கவில்லை என்று அந்தப் பெண்ணைப் பார்த்து கத்தினார்.

அதைத்தொடர்ந்து ஆங்கிலத்தில் கருப்பினத்தவர்களை அவமதிக்கும் வகையில் பயன்படுத்தப்படும் ஒரு சொல்லின் ஜேர்மானிய சொல்லைக் கூறி அவரைத் திட்டினார்.

இதைக் கேட்ட அந்த பெண்ணும் காரில் அவருடன் அமர்ந்திருந்த அவரது பிள்ளைகளும் திடுக்கிட்டனர்.

இந்த சம்பவத்தையடுத்து, Volketswilஇல் அமைந்துள்ள அந்த மெக் டொனால்ட் உணவக ஊழியர் வேலையை விட்டு நீக்கப்பட்டதோடு, சுவிட்சர்லாந்தில் அமைந்துள்ள மெக் டொனால்ட் நிறுவனத்தின் தலைமை அலுவலகம் அவரது தவறுக்கு வருத்தம் தெரிவிப்பதாக அறிவித்துள்ளது.

தனது நிறுவனம் பாகுபாடு எந்த வடிவத்தில் இருந்தாலும் அதை அனுமதிப்பதில்லை என்றும் அது தெரிவித்துள்ளது.

இந்நிலையில் எங்கு அந்த பெண் அவமதிக்கப்பட்டாரோ அதே உணவகம் அவரை இலவசமாக உணவு உண்பதற்கு அழைப்பு விடுத்துள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்