சுவிஸ் பெடரல் கவுன்சிலில் ஒரே வாரத்தில் இரண்டு ராஜினாமா! பதவி விலகிய பெண் உறுப்பினர்

Report Print Kabilan in சுவிற்சர்லாந்து
100Shares
100Shares
ibctamil.com

சுவிஸில் சுற்றுச்சூழல் அமைச்சர் டோரிஸ் லிதார்டு, பெடரல் கவுன்சிலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

சுவிட்சர்லாந்தின் ஏழு உறுப்பினர்களைக் கொண்ட பெடரல் கவுன்சிலில் இருந்து, கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் பொருளாதார அமைச்சர் Johann Schneider-Ammann விலகினார்.

பின்னர், அவரது இடத்திற்கு பெண் ஒருவர் நியமிக்கப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், சுற்றுச்சூழல் அமைச்சரான டோரிஸ் லிதார்டும் பெடரல் கவுன்சிலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

கடந்த 2006ஆம் ஆண்டு பெடரல் கவுன்சில் உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட டோரிஸ், கடந்த 2010ஆம் ஆண்டில் இருந்து சுற்றுச்சூழல், போக்குவரத்து, எரிசக்தி மற்றும் தகவல் தொடர்பு ஆகிய துறைகளுக்கு அமைச்சராக உள்ளார்.

முன்னதாக, அடுத்த ஆண்டு தான் பதவி விலக திட்டமிட்டுள்ளதாக டோரிஸ் தெரிவித்திருந்தார். இந்நிலையில், Johann Schneider-Ammann பதவி விலகிய இரண்டு நாட்களிலேயே டோரிஸும் பதவி விலகுவதாக அறிவித்துள்ளதால், பெடரல் கவுன்சிலில் இரண்டு வெற்றிடம் ஏற்படும்.

அத்துடன் இந்த வெற்றிடங்களை நிரப்ப இரண்டு பெண்களே நியமிக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது. தற்போதைய கவுன்சிலில் இருக்கும் ஒரே பெண் உறுப்பினர் நீதித்துறை அமைச்சரான Simonetta Sommaruga மட்டும் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்