காதலியை ஏமாற்ற காதலன் செய்த செயல்: நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

சுவிஸ்ஸில் சாலை விபத்தை புகைப்படம் எடுத்த சாரதிக்கு பெரும் தொகையை அபராதமாக விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

சுவிட்சர்லாந்தின் Fribourg மாகாணத்தில் உள்ள Kerzers நகரில் நடந்த சாலை விபத்தை இளைஞர் ஒருவர் புகைப்படம் எடுத்துள்ளார்.

தமது காதலியை சந்திக்க செல்லும் அவர், சாலை விபத்து காரணமாக தாமதம் ஏற்பட்டது என்பதை நிரூபிக்கவே புகைப்படம் எடுத்துள்ளார்.

ஆனால் அந்த இளைஞரை தடுத்து நிறுத்திய பொலிசார், வாகன போக்குவரத்து சட்டத்தை மீறியதாக கூறி 300 பிராங்குகள் அபராதம் செலுத்த உத்தரவிட்டுள்ளனர்.

இதற்கு மறுப்பு தெரிவித்த குறித்த இளைஞர் Murten பகுதி நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். இந்த வழக்கு அவருக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கப்பட்டது.

ஆனால், அரசு தரப்பு இந்த வழக்கை மாகாண நீதிமன்றத்திற்கு எடுத்துச் சென்றது. இச்சம்பவம் தொடர்பான விசாரணையில் குறித்த இளைஞர் வாகனம் செலுத்தும் போது தமது மொபைலை பயன்படுத்தியதாக அரசு தரப்பு வாதிட்டது.

மேலும், ஒருவர் தனது மொபைலை உரிய முறையில் பயன்படுத்தாமல் இருந்தால் விபத்து நடந்த பகுதியை துல்லியமாக புகைப்படம் எடுக்க முடியாது எனவும் அரசு தரப்பு வாதிட்டுள்ளது.

இதனையடுத்து தமது செயலுக்கு வருத்தம் தெரிவித்ததுடன், நடந்தவற்றை அந்த இளைஞர் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளார்.

இதனையடுத்து 100 பிராங்குகள் அபராதமாகவும், நீதிமன்ற நடவடிக்கை கட்டணமாக 1350 பிராங்குகள் செலுத்தவும் உத்தரவிட்டுள்ளது.

கால தாமதத்திற்கு புகைப்படத்தை காண்பித்து காதலியை ஏமாற்ற நினைத்த காதலனுக்கு அந்த புகைப்படமே வினையாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்