சுவிஸ்ஸில் இளம் வயது காதலியால் முதியவருக்கு எற்பட்ட துயரம்

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

சுவிஸ் தலைநகர் பெர்னில் மன நலம் பாதிக்கப்பட்ட முதியவர், தமது இளம் வயது காதலியால் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த சம்பவத்தில் தொடர்புடைய இளம் பெண்ணை பொலிசார் கைது செய்துள்ளனர்.

திங்களன்று மாலை நடந்த இந்த படுகொலை தொடர்பாக பொலிசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில்,

கடந்த பல ஆண்டுகளாக படுகொலை செய்யப்பட்ட அந்த 55 வயது முதியவர் சம்பவம் நடந்த அடுக்குமாடி குடியிருப்பில் குடியிருந்து வந்ததாக தெரியவந்துள்ளது.

அனைவருடனும் மிகவும் நட்பாக பழகும் அந்த முதியவர் நிரந்தரமாக எந்த வேலையிலும் இருந்ததில்லை எனவும், பகல் முழுவதும் அந்த கிராமப்பகுதியில் வலம் வந்ததாகும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

சிலர் அவருக்கு மன நிலை பாதிப்பு இருந்தது எனவும், அதற்கான சிகிச்சையில் அவர் இருந்து வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் அவர் அடிக்கடி தமது துணையை மாற்றி வந்ததாகவும், பெரும்பாலும் கிழக்கு ஐரோப்பிய பெண்களையே அவர் விரும்பியதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

தற்போது அவருடன் வாழ்ந்த இளம் பெண்ணும் அவரைவிடவும் பல ஆண்டுகள் இளையவர் எனவும் தெரிவித்துள்ளனர்.

பொருளாதார நெருக்கடியில் அவர் சிக்கியிருப்பதும், பல முறை அபராதம் செலுத்தும் நிலைக்கு அவர் தள்ளப்பட்டிருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இருப்பினும் கொலைக்கான காரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இளம் பெண்ணை விசாரணை செய்த பின்னரே தெரியவரும் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers