சுவிஸ் ரயில்களில் டிக்கெட் இன்றி பயணிக்கும் செயலி அறிமுகம்

Report Print Kabilan in சுவிற்சர்லாந்து
621Shares
621Shares
ibctamil.com

சுவிட்சர்லாந்தில் ரயில் பயணத்தை எளிதாக்க, டிக்கெட் இன்றி பயணிக்கும் வகையில் செயலி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ரயில் நிலையங்களில் டிக்கெட்டிற்காக பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. எனவே, இந்த சிரமத்தை தவிர்க்க ‘SBB Preview App' எனும் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

பயணிகள் இந்த செயலியை பயன்படுத்தி குறைந்த கட்டணத்தில் எளிதாக பயணத்தை மேற்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செயலியை தரவிறக்கம் செய்து, அதனை log on செய்து EasyRide மற்றும் ’Check in' ஆகியவற்றை தெரிவு செய்துகொள்ள வேண்டும். பயணம் முடிந்தவுடன் ‘Check out' செய்து விட வேண்டும்.

இந்த செயலியானது டிக்கெட்டுக்கான கட்டணத்தை, பயணியின் கிரெடிட் கார்டு அல்லது வங்கி கணக்கில் இருந்து எடுத்துக் கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

சோதனை ஓட்டமாக இந்த சேவை, சூரிச் உட்பட சுவிஸ் நகரங்களில் செயல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்