சுவிட்சர்லாந்தில் கல்லறைகளுக்கு ரோந்து செல்லும் பொலிசார்: காரணம் தெரியுமா?

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து
364Shares
364Shares
ibctamil.com

சுவிட்சர்லாந்தின் தலைநகரான Bernஇல் பொலிசார் கல்லறைகளுக்கு காவலுக்கு செல்லத் தொடங்கியுள்ளார்கள்.

Bernஇல் ஒரு புதுவித குற்றம் தலையெடுக்கத் தொடங்கியுள்ளது.

கல்லறைகளுக்கு சென்று பூங்கொத்துகளை வைக்கச் செல்லும் முதியவர்களைக் குறிவைத்து ஒரு கும்பல் செயல்படத் தொடங்கியுள்ளது.

அந்த கூட்டத்தில் உள்ளவர்கள், கல்லறைகளுக்குச் சென்று பூங்கொத்துகளை வைக்கும்

முதியவர்களின் பின்னால் சென்று, அவர்கள் தங்கள் கைப்பைகளைக் கீழே வைத்து விட்டு பூங்கொத்துகளை வைக்கும்போது அந்த கைப்பைகளைத் தூக்கிக் கொண்டு ஓடி விடுகின்றனர்.

முதியவர்களால் அவர்களைத் துரத்திச் செல்ல இயலாததால், தங்கள் கண் முன்னே தங்கள் கைப்பை திருடு போவதை வேடிக்கை பார்ப்பதைத் தவிர அவர்களுக்கு வேறு வழியில்லை. தொடர்ந்து இதுபோன்ற திருட்டு சம்பவங்கள் நடப்பதாகப் புகாரளிக்கப்பட்டதையடுத்து, பொலிசார் கல்லறைகளுக்கு ரோந்து செல்லத் தொடங்கியுள்ளனர்.

இந்த நூதனத் திருடர்களைக் குறித்து, கல்லறைகளுக்கு செல்பவர்களை எச்சரிக்கும் வகையில் போஸ்டர்களும் ஒட்டப்பட்டுள்ளன.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்