அப்பாவின் முகத்தை ஒருமுறையேனும் பார்க்கணும்: இளம் பெண்ணின் உருக்கமான கோரிக்கை

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து
399Shares
399Shares
ibctamil.com

சுவிஸ் நாட்டவரான தந்தையை, பிறந்து 22 ஆண்டுகளுக்கு பின்னர் இளம் பெண் ஒருவர் முதன் முறையாக தேடத் துவங்கியுள்ளார்.

டொமினிக்கன் குடியரசு நாட்டவரான Valerie Holguin என்ற 22 வயது இளம் பெண்ணே தமது சுவிஸ் தந்தையை ஒருமுறையேனும் சந்திக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தவர்.

தலைவிரித்தாடும் பஞ்சம், குடிநீர் இன்றி தவிப்பு, கல்வி வசதி இல்லை என பட்டியலிடும் அவர், இதுதான் தற்போதைய டொமினிக்கன் குடியரசின் உண்மையான நிலை என்கிறார்.

பிறந்து 22 ஆண்டுகள் கடந்தாலும், சுவிஸ் நாட்டவரான தந்தைக்கு தம்மை கண்டிப்பாக அடையாளம் தெரியும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தற்போது காதலர் மற்றும் அவரது தாயாருடன் குடியிருக்கும் வேலரி, பொருளாதார ரீதியாக மிகவும் தத்தளிப்பதாகவும், தற்போது தமது தேவை ஒரு வேலை எனவும் தெரிவித்துள்ளார்.

தமது சுவிஸ் தந்தையிடம் இருந்து பணம் எதுவும் தாம் எதிர்பார்க்கவில்லை எனவும், ஆனால் சுவிஸ் குடிமகளாக தம்மை அவர் ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும், தமது தந்தையின் முகத்தை நேரிடையாக பார்க்க வேண்டும் எனவும், அவரிடம் கேட்க வேண்டிய கேள்வியை அப்போது தாம் முடிவு செய்ய இருப்பதாகவும் வேலரி தெரிவித்துள்ளார்.

தாம் பிறந்தபோது சுவிஸ் நாட்டவரான தமது தந்தை Trimbach பகுதியில் குடியிருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சுவிஸ்ஸில் சுற்றுலா வந்த வேலரியின் தாயார் இளைஞர் ஒருவருடன் காதல் வயப்பட்டதாகவும், அந்த இளைஞருக்கு பிறந்த மகளே வேலரி எனவும் தற்போது சுவிட்சர்லாந்தில் குடியிருக்கும் பெண்மணி ஒருவரும் சாட்சியம் அளித்துள்ளார்.

வேலரியின் தாயார் கர்ப்பமடைந்தது, டொமினிக்கன் குடியரசுக்கு திரும்ப முடிவு செய்ததாகவும், அந்த இளைஞர் கண்டிப்பாக வந்து திருமணம் செய்து கொள்வதாக உறுதி அளித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால் தொடர்புடைய இளைஞர் பின்னர் டொமினிக்கன் குடியரசு சென்றதில்லை எனவும் அந்த பெண்மணி தெரிவித்துள்ளார்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்