லேப்டாப் பயன்படுத்திய சுவிஸ் அரசியல்வாதிக்கு ஏற்பட்ட நிலை

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து
107Shares
107Shares
ibctamil.com

சுவிட்சர்லாந்து அரசியல்வாதியும் தேசிய கவுன்சிலின் துணைத் தலைவருமான Marina Carobbio, தனது லேப்டாப்பை பயன்படுத்தும்போது எதிர்பாராதவிதமாக அது வெடித்ததால் காயமடைந்தார்.

வெடித்தது HP நிறுவனத்தின் Zbook மொடல் லேப்டாப் ஆகும். இதில் வேடிக்கை என்னவென்றால், சுவிஸ் நாடாளுமன்றத்திற்கு லேப்டாப் வாங்குவதற்கு இந்த மாதம்தான் டெண்டர் விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நேரத்தில் இப்படி ஒரு விபத்து ஏற்பட்டுள்ளது நிச்சயம் HP நிறுவனத்திற்கு கெட்ட செய்திதான்.

இதேபோல் தேசிய கவுன்சிலின் தலைவரான Dominique de Bumanம் தனது லேப்டாப்பின் பேட்டரி உருகும் அளவிற்கு அதிக சூடாகியதால் பேட்டரியை மாற்றியதாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது, அதுவும் இதே மொடல் லேப்டாப்தான்.

Marina Carobbioவுக்கு பலத்த காயம் ஏற்பட்டதால் அவர் மருத்துவ உதவியை நாட வேண்டியதாயிற்று.

HP நிறுவனத்தின் சுவிட்சர்லாந்து பிரிவு தலைவரான Adrian Müller கூறும்போது, தங்கள் நிறுவன லேப்டாப்பில் இம்மாதிரி பேட்டரி வெடித்து காயம் ஏற்படுவது இதுதான் முதல் முறை என்று கூறினார்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்