வெளிநாட்டு சிறைகளில் தவிக்கும் சுவிஸ் குடிமக்கள்: எந்த குற்றங்களுக்கு தெரியுமா?

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

வெளிநாட்டு சிறைகளில் சிக்கித் தவிக்கும் சுவிட்சர்லாந்து குடிமக்கள் தொடர்பில் புதிய ஆய்வறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.

குறித்த ஆய்வில் பிரான்ஸ் நாட்டு சிறையிலேயே அதிகமாக சுவிஸ் நாட்டவர்கள் சிறைக் கைதிகளாக உள்ளனர் என தெரியவந்துள்ளது.

ஒட்டுமொத்தமாக 215 சுவிஸ் நாட்டவர்கள் வெளிநாட்டு சிறைகளில் கைதிகளாக உள்ளனர். இதில் பிரான்ஸ் நாட்டில் மட்டும் 28 பேர் சிறை தண்டனை அனுபவிக்கின்றனர்.

இதற்கு அடுத்தபடியாக 24 பேர் ஜேர்மனி நாட்டில் கைதிகளாக உள்ளனர். 14 பேர் ஸ்பெயின் நாட்டிலும் 13 பேர் தாய்லாந்திலும் சிறை வைக்கப்பட்டுள்ளனர்.

215 பேர் கொண்ட இந்த பட்டியலில் சுமார் 60 பேர் விசா காலக்கெடு முடிந்து அந்த நாட்டு அதிகாரிகளிடம் சிக்கியவர்கள் எனவும், சிலர் போதை மருந்து பயன்படுத்திய குற்றத்திற்காக கைதானவர்கள் என தெரியவந்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பில் சுவிஸ் வெளிவிவகார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தாய்லாந்தை பொறுத்தமட்டில் போதை மருந்து பயன்பாடு என்பது தடை செய்யப்பட்டுள்ளதாகும்.

இருப்பினும் போதை மருந்து பயன்பாடு தொடர்பில் சோதனையில் தெரியவந்தால் அந்த நாட்டின் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

மேலும், கொள்ளை, முறைகேடு உள்ளிட்ட குற்றங்களுக்காகவும் சுவிஸ் நாட்டவர்கள் கைது செய்யப்பட்டு சிறை தண்டனை அனுபவித்து வருவதாக தெரியவந்துள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்