சுவிஸில் சாலை விபத்தில் சிக்கிய ஜேர்மன் சுற்றுலா பேருந்து: 3 பேர் கவலைக்கிடம்

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தின் டிசினோ மாகாணத்தில் ஜேர்மன் சுற்றுலா பயணிகளின் பேருந்து ஒன்று சாலை விபத்தில் சிக்கியதில் அதில் பயணம் செய்த அனைவரும் உயிர் தப்பியுள்ளனர்.

டிசினோ மாகாணத்தின் Sigirino நகரில் A2 சாலையில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

சாலை அருகாமையில் அமைந்துள்ள போக்குவரத்து சமிக்கைகள் தெரிவிக்கும் கம்பத்தில் பலமாக மோதியதில் பேருந்தின் முன்பக்கம் சிதைந்துள்ளது.

இதில் சாரதி உள்ளிட்ட 13 பேர் படுகாயமடைந்துள்ளனர். அதில் 3 பேரின் நிலை கவலைக்கிடம் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

தகவல் அறிந்து விரைந்த வந்த பொலிசார் காயமடைந்தவர்களை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

குறித்த பேருந்தில் மொத்தம் 25 பேர் பயணமானதாக கூறப்படுகிறது. பேருந்தில் சாரதியின் பக்கம் மிக மோசமாக சேதமடைந்துள்ளதாக உள்ளூர் பத்திரிகைகள் புகைப்படங்கள் வெளியிட்டுள்ளன.

குறித்த பேருந்தானது இத்தாலிக்கு செல்லும் வழியில் இந்த சாலை விபத்தில் சிக்கியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers