ஆயிரத்திற்கு மேற்பட்ட புலம்பெயர்ந்தோரை வெற்றிகரமாக நாடு கடத்திய சுவிட்சர்லாந்து

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

புலம்பெயர்ந்தோரை நாடுகடத்த ஐரோப்பிய நாடுகள் பல தடுமாறிக் கொண்டிருக்கும் நேரத்தில், சுவிட்சர்லாந்து கடந்த ஆண்டில் மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோரை வெற்றிகரமாக நாடு கடத்தியுள்ளதாக சுவிட்சர்லாந்தின் புள்ளிவிவரங்கள் அலுவலகம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டில் மட்டும் 1,039 வெளிநாட்டு குற்றவாளிகள் நாடு கடத்தப்பட உத்தரவிடப்பட்டதாக சுவிஸ் ஃபெடரல் புள்ளிவிவரங்கள் அலுவலகம் தெரிவித்துள்ளது.

அவர்களில் அதிகம்பேர், அதாவது 348 பேர் Balkans நாட்டைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

நாடு கடத்தப்பட்டவர்களில் 250 பேர் ஆப்பிரிக்கர்கள், 157 பேர் வட ஆப்பிரிக்காவையும் 93 பேர் மேற்கு ஆப்பிரிக்காவையும் சேர்ந்தவர்கள்.

ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளைச் சேர்ந்தவர்கள் 279 பேர் நாடு கடத்தப்பட்டுள்ளார்கள், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுடன் சுவிட்சர்லாந்து ஒப்பந்தம் செய்துள்ள நிலையில், இது Schengen ஒப்பந்தத்தை மீறியதாக கருதப்படலாம்.

ஆனால் உண்மையில் சுவிஸ் குற்றவியல் விதிகளின் கீழ் குற்றவாளிகள் என தீர்க்கப்பட்ட, வயது வந்த வெளிநாட்டவர்களில், ஒரு சிறு பகுதியினர் மட்டுமே 2017ஆம் ஆண்டு நாடு கடத்தப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

2017இல் சுவிட்சர்லாந்தில், கொலை முதல் பாலியல் ரீதியான தாக்குதல்கள் வரையான தீவிர குற்றங்கள் செய்தவர்களை நாடு கடத்தும் உரிமையை நீதிமன்றத்திற்கு வழங்கும் சட்டம் இயற்றப்பட்டது.

அந்த சட்டம், முதல் முறை குற்றம் புரிவோரை 15 ஆண்டுகள் வரை சுவிட்சர்லாந்துக்குள் அனுமதிக்க தடை செய்யும் உரிமையையும், திரும்பத் திரும்ப குற்றம் செய்வோரை ஆயுட்காலம் முழுமைக்கும் தடை செய்யும் உரிமையையும் நீதிபதிகளுக்கு வழங்குகிறது.

கடந்த ஆண்டில் ஏராளமான அகதிகள் தலைமறைவானதாலும், சிலர் மருத்துவ சான்றிதழ்கள் பெற்று நாடு கடத்தப்படுவதிலிருந்து விலக்கு பெற்றதாலும், சில சம்பவங்களில் விமானிகள் நாடு கடத்தப்படுபவர்களை அவர்களது நாடுகளுக்கு கொண்டு செல்ல மறுத்ததாலும், ஜேர்மனி முதலான பல ஐரோப்பிய நாடுகளுக்கு வட ஆப்பிரிக்கா பொன்ற பகுதிகளுக்கு குற்றம் புரிந்த புலம்பெயர்ந்தோரை நாடு கடத்துவது இன்னமும் கடினமாகவே உள்ள நிலையில் சுவிட்சர்லாந்து ஆயிரத்திற்கும் மேலானோரை நாடு கடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்