சுவிட்சர்லாந்தில் பதப்படுத்தப்பட்ட உடல்களைக் காட்டும் சர்ச்சைக்குரிய நிகழ்ச்சி ரத்து: பின்னணி

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்து நகரம் ஒன்றில் நடத்தப்படுவதாக இருந்த பதப்படுத்தப்பட்ட உடல்கள் அடங்கிய கண்காட்சி ஒன்று ரத்து செய்யப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்தின் Lausanne நகரில் நடத்தப்படுவதாக இருந்த பதப்படுத்தப்பட்ட உடல்கள் அடங்கிய கண்காட்சி ஒன்றிற்கு கிறிஸ்தவ அமைப்புஒன்று எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து அந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.

அந்த உடல்கள் சித்திரவதை செய்யப்பட்ட அல்லது கொல்லப்பட்ட சீனர்கள் மற்றும் சீனாவில் தடை செய்யப்பட்ட அமைப்பு ஒன்றைச் சார்ந்தவர்களின் உடல்களாக இருப்பதற்கு அதிக வாய்ப்புள்ளதாகக் கூறி அந்த அமைப்பு இந்த கண்காட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்தது.

இதற்கு முன் பெர்ன் நகர அதிகாரிகளும் அந்த உடல்கள் எங்கிருந்து கொண்டுவரப்பட்டவை என்பதற்கான ஆதாரம் மற்றும் அந்த உடல்களை பயன்படுத்துவதற்கு அந்த உடல்கள் யாருக்கு சொந்தமோ அவர்களது உறவினர்களின் எழுத்துப்பூர்வ ஒப்புதல் ஆகியவற்றை சமர்ப்பித்தால்தான் அந்த கண்காட்சி நடத்த அனுமதியளிக்கப்படும் என்றும் கேட்டிருந்தனர்.

அந்த கண்காட்சியை நடத்துபவர்கள் தங்களிடம் தேவையான ஆவணங்கள் இருப்பதாகத் தெரிவித்தனர்.

என்றாலும் Lausanne நகரில் நடத்தப்படுவதாக இருந்த கண்காட்சிக்கு சித்திரவதைக்கு எதிரான கிறிஸ்தவ அமைப்பு எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த நிகழ்ச்சி நடத்தப்படாது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்