சுவிட்சர்லாந்தில் 8 நபர்களுக்கு சிறை தண்டனை: இருவரை நாடுகடத்த முடிவு

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தின் விண்டர்தார் பகுதியில் உள்ள மசூதி ஒன்றை தாக்கிய வழக்கில் 8 பேருக்கு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

செவ்வாய் அன்று விண்டர்தார் பகுதியில் செயல்பட்டுவரும் பிராந்திய நீதிமன்றம் ஒன்று குறித்த வழக்கு தொடர்பாக இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.

மேலும், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அனைவரும் நன்னடத்தை சோதனை காலத்தில் மீண்டும் குற்றச்செயலில் ஈடுபட்டால் அபராதம் செலுத்த நேரிடும் எனவும் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

தாக்குதல் நடந்த காலகட்டத்தில் 17 வயது என தெரிவிக்கப்பட்ட இளைஞருக்கு 6 மாத சிறை தண்டனையும் எஞ்சியவர்களுக்கு 18 மாத சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட ஆப்கான் மற்றும் மாசிடோனியா நாட்டவர்கள் இருவரை உடனடியாக நாட்டைவிட்டு வெளியேற உத்தரவிட்டுள்ளதுடன்,

அடுத்த 7 ஆண்டுகளுக்கு சுவிட்சர்லாந்துக்குள் அனுமதி மறுக்கப்படுவதாகவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2016 ஆம் ஆண்டு சர்ச்சைக்குரிய இந்த மசூதியில் நடந்த வழிபாட்டின்போது இருவர் இங்குள்ள சடங்கு தொடர்பில் பத்திரிகையாளர் ஒருவருக்கு ரகசியமாக தகவல் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதில் ஆத்திரமடைந்த பக்தர்கள் சிலர் அவர்கள் இருவரையும் கொடூரமாக தாக்கியதுடன், கொலை மிரட்டல் விடுக்கவும் செய்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக அவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட பொலிசார் இந்த விவகாரம் தொடர்பாக 8 பேரை கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...