சுவிஸ் இஸ்லாமிய கல்வியாளருக்கு எதிரான பாலியல் வழக்கில் திடீர் திருப்பம்

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

பிரான்சில் இரண்டு பெண்களை பாலியல் வன்புணர்வு செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள சுவிஸ் இஸ்லாமிய கல்வியாளரான Tariq Ramadan வழக்கில் அதிரடி திருப்பமாக, இதுவரை தான் அந்தப் பெண்களுடன் பாலுறவு கொள்ளவில்லை என்று கூறி வந்த அவர் தற்போது அந்தப் பெண்களின் சம்மதத்துடன்தான் உறவு வைத்துக் கொண்டதாக பல்டி அடித்துள்ளார்.

Tariq Ramadanம் அவரால் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் பெண்களும் பரஸ்பரம் பகிர்ந்து கொண்ட குறுஞ்செய்திகள் வெளியானதையடுத்து அவர் இதுவரை தான் கூறியதை மாற்றிக் கொண்டுள்ளார்.

அந்த செய்திகளிலிருந்து, அந்த பெண்கள் Tariq Ramadanஉடன் விரும்பியே உறவு வைத்துக் கொண்டதும், இரு தரப்பினரின் சம்மதத்துடனேயே உறவு கொண்டதும் ஒரு முறை உறவு கொண்ட பின்னரும் அவர்கள் மீண்டும் அவருடன் உறவு வைத்துக் கொள்ள விரும்பியதும் தெரிய வந்துள்ளது.

Ramadan, 2009 மற்றும் 2012ஆம் ஆண்டு இரண்டு பெண்களை பாலியல் வன்புணர்வு செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு பிப்ரவரி மாதம் 2ஆம் திகதி முதல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

முன்பு அவர் தன் மீது பாலியல் குற்றம் சாட்டிய பெண்ணியவாதியான Henda Ayari மற்றும் மாற்றித்திறனாளியான Christelle என்னும் இரண்டு பெண்களுடனும் பாலுறவு கொள்ளவேயில்லை என்று மறுத்து வந்தார்.

கடந்த ஆண்டு Me Too இயக்கம் உச்சத்தை அடைந்த நிலையில் Ramadanமீது பாலியல் குற்றம் சாட்டப்பட்டதால் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றிய அவர் தனது பணியை உதறினார்.

சுவிஸ் குடிமகனான Ramadan, எகிப்தின் Muslim Brotherhood movement என்னும் இயக்கத்தை நிறுவியவரின் பேரனாவார்.

பிரான்சில், பாரீஸ் அருகில் சிறை வைக்கப்படுள்ள Ramadan, காவலில் வைக்கப்பட்டுள்ளதால் தனது உடல் நலப்பிரச்சினைக்கு சிகிச்சை பெறுவது கடினமாகியுள்ளதாக தெரிவித்து பல முறை ஜாமீன் கோரியும் அவரது கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக, கடந்த மாதம் கணினியியல் நிபுணர் ஒருவர் Ramadanக்கும் 2009ஆம் ஆண்டு Lyonஇல் உள்ள ஹோட்டல் ஒன்றில் அவரால் வன்புணர்வு செய்யப்பட்டதாக குற்றம் சாட்டிய Christelle என்னும் பெண்ணுக்கும் இடையில் நிகழ்ந்த 399 குறுஞ்செய்திகளை மீட்டெடுத்துள்ளார்.

அந்த செய்திகளில் அவர் தனது முரட்டு பாலியல் ஆசைகளை அந்த பெண்ணுக்கு வெளிப்படுத்தியுள்ளார்.

அதன் பின்னர் தான் Christelleஉடன் முரட்டுத்தனமான உறவு கொண்டதற்காக அவரிடம் மன்னிப்புக் கேட்டுள்ளார்.

Christelle மட்டுமல்லாது 2012ஆம் ஆண்டு பாரீஸ் ஹோட்டல் ஒன்றில் தன்னை வன்புணர்வு செய்ததாக குற்றம் சாட்டியிருந்த Henda Ayariஉடன் அவர் பகிர்ந்து கொண்ட குறுஞ்செய்திகள் குறித்த விவரங்களையும் வழக்கறிஞர்கள் வெளியிட்டுள்ளதால் வழக்கு திசை மாறியுள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers