ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3 மணிக்கு சுவிஸ் நாட்டு அனைவரும் மக்கள் என்ன செய்ய போகிறார்கள்?

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

வரும் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மூன்று மணிக்கு சுவிஸ் நாட்டு மக்கள் அனைவரும் தங்கள் கடிகாரங்களில் நேரத்தை ஒரு மணி நேரம் பின்னோக்கி நகர்த்த இருக்கிறார்கள்.

காரணம், ஐரோப்பாவில் daylight savings துவங்க இருக்கிறது. அதனால் 28 அக்டோபர் 2018 அன்று அதிகாலை 3 மணிக்கு மக்கள் அனைவரும் தங்கள் கடிகாரங்களில் நேரத்தை ஒரு மணி நேரம் பின்னோக்கி நகர்த்த இருக்கிறார்கள்.

அப்படியென்றால், அன்று காலையில் இன்னும் ஒரு மணி நேரம் அதிகம் தூங்கலாம், ஆனால் மாலையில் சீக்கிரம் இருட்டிவிடும்.

சுவிட்சர்லாந்து தனது கடிகாரங்களில் மாற்றம் செய்யும் அதே நேரத்தில் மொத்த ஐரோப்பாவும் தங்களது கடிகாரங்களில் நேரத்தை ஒரு மணி நேரம் பின்னோக்கி நகர்த்த இருக்கிறது.

ஞாயிற்றுக்கிழமை காலையில் ஜெனீவாவில் காலை மணி 7.10க்கு சூரியன் உதிக்கும், மாலை 5.27க்கு மறையும்.

இந்த ஆண்டின் மிகக் குறுகிய நாள் 21 டிசம்பர் 2018 ஆகும். அன்று காலை 8.14க்குதான் சூரியன் உதிக்கும், மாலை 4.52க்கு மறைந்துவிடும்.

அன்றைக்கு பகல் பொழுது வெறும் 8 மணி நேரம் 37 நிமிடங்கள் மட்டுமே. இந்த மாற்றம் 31 மார்ச் 2019 வரை நீடிக்கும், அன்று மீண்டும் அதிகாலை 2 மணிக்கு மக்கள் தங்கள் கடிகாரங்களில் நேரத்தை ஒரு மணி நேரம் முன்னோக்கி நகர்த்திக் கொள்வார்கள்.

ஆனால் சமீபத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தில் மக்களிடம் கருத்துக் கேட்ட போது இந்த பழக்கத்தை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்று 84 சதவிகிதம் பேர் விருப்பம் தெரிவித்திருந்தனர்.

இதனால் ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள நாடுகளுடன் இணைந்து சுவிட்சர்லாந்தும் இந்த பழக்கத்தைக் கைவிடுமா என்னும் கேள்வி எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers