சூரிச் விமான நிலைய அகதிகள் முகாமும் சிறைதான்: கலங்கும் 4 குடும்பங்கள்

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

சுவிஸில் புகலிட கோரிக்கை நிராகரிக்கப்பட்ட 20 அகதிகள், சூரிச் விமான நிலைய அகதிகள் முகாமானது சிறைக்கு ஒத்திருப்பதாக கண்கலங்கியுள்ளனர்.

கடந்த 7 வாரத்திற்கும் மேலாக சூரிச் விமான நிலையத்தின் உள்ளே அமைந்துள்ள அகதிகள் முகாமில் 4 குர்து இன குடும்பங்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் அனைவரும் தென்னாப்பிரிக்கா வழியாக சிரியா, துருக்கி மற்றும் ஈராக் நாட்டில் இருந்து சுவிஸில் தஞ்சம் கோரி வந்தவர்களாவர்.

ஆனால் சுவிஸ் குடியுரிமை அதிகாரிகள் இவர்களது புகலிட கோரிக்கையை நிராகரித்துள்ள நிலையில்,

தற்போது சூரிச் விமான நிலையத்தில் உள்ள அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

பொதுவாக குடியுரிமை கோரும் அகதிகளை அதற்கான முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

ஆனால் இவர்களை நாட்டுக்குள் அனுமதிக்க அரசு மறுத்ததை அடுத்து தற்காலிகமாக விமான நிலையத்தின் அகதிகள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மட்டுமின்றி வாரம் ஒன்றிற்கு தலா 21 பிராங்குகள் உதவித் தொகையும் அரசு வழங்கி வருகிறது.

ஆனால் அந்த தொகையானது தூங்குவதற்கான அறைக்கே செலவாகும் நிலை இருப்பதாகவும்,

தங்களை தங்க வைத்திருக்கும் அறையில் சாளரங்களே இல்லை எனவும், விமான நிலையத்தின் மொட்டை மாடியில் வந்து நின்றால் மட்டுமே மூச்சுவிட முடிகிறது என அவர்கள் கண்கலங்கியுள்ளனர்.

இந்த நிலை எத்தனை நாள் நீடிக்கும் என தெரியவில்லை என கூறும் அந்த 4 குடும்பங்களும், தங்களை தென்னாப்பிரிக்காவுக்கு திருப்பி அனுப்பினால், அவர்கள் சிரியாவுக்கோ ஈராக்குக்கோ அனுப்பி வைப்பார்கள்,

ஆனால் அதன்பின்னர் தங்களை உயிருடன் பார்ப்பது கடினமே என தங்கள் நிலையை பதிவு செய்துள்ளனர்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers