வாகன சோதனையில் ஈராக் நாட்டினருடன் சிக்கிய தேடப்படும் குற்றவாளி: மனிதக் கடத்தல் என தகவல்

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த பொலிசார் சந்தேகத்தின் பேரில் கார் ஒன்றை சோதனையிட்டபோது அதில் தேடப்படும் இத்தாலியர் ஒருவரோடு அவர் சுவிட்சர்லாந்திற்குள் கடத்தி வந்த நான்கு ஈராக்கியர்களும் சிக்கினார்கள்.

சுவிட்சர்லாந்தின் Schwyz பகுதியில் ஈராக் நாட்டவர்கள் நால்வரை சுவிட்சர்லாந்திற்குள் கடத்தி வந்த இத்தாலியர் ஒருவர் சட்ட விரோதமாக அகதிகளை நாட்டிற்குள் கொண்டு வந்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார். கடத்தி வரப்பட்ட நால்வரும் 20 முதல் 45 வயதுக்குட்பட்டவர்கள் என பொலிசார் தெரிவித்தனர்.

அந்த நால்வரும் சட்ட விரோதமாகவும் வேண்டுமென்றேயும் நாட்டிற்குள் நுழைந்ததற்காக கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களைக் கடத்தி வந்த நபர் பொலிசாரால் தேடப்படும் ஒரு குற்றவாளியாவார். சமீப காலமாக ஏராளமான கடத்தல்காரர்கள் அகதிகளை நீர் மார்க்கமாக நாட்டிற்குள் கடத்தி வருவதாக தகவல்கள் வந்துள்ளன.

2017ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஆகஸ்டு வரையிலான காலகட்டத்தில் மட்டும் எல்லைப் பாதுகாப்பு படையினர் கடத்தலில் ஈடுபட்டதாக சந்தேகத்தின்பேரில் 271 பேரை கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்