அபராதம் செலுத்துவதற்கு பதில் ஜெயிலுக்கு போகத் தயார்: சுவிஸ் பெண்மணி கூறுவதற்கு காரணம்

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

அபராதம் செலுத்துவதற்கு பதில் ஜெயிலுக்கு போகத் தயார் என சுவிஸ் பெண்மணி ஒருவர் கூறியுள்ளார்.

சுவிட்சர்லாந்தின் Thurgau பகுதியில் மதுபான விடுதி ஒன்றை நடத்திவரும் Bernadette Ackermann என்னும் பெண்மணி மீது பெயர் வெளியிடாத சிலர் பொலிசில் புகாரளித்துள்ளனர்.

அவரது மதுபான விடுதியில் நடந்த ஒரு பார்ட்டியைத் தொடர்ந்து, பார்ட்டிக்கு வந்த மக்கள் சிலர் மதுபான விடுதிக்கு வெளியே அமர்ந்து பேசிக் கொண்டிருந்தது தங்களுக்கு இடைஞ்சலாக இருந்ததாக யாரோ புகாரளித்ததையடுத்து பொலிசார் அவருக்கு 100 சுவிஸ் ஃப்ராங்குகள் அபராதம் விதித்தனர்.

ஆனால் அபராதம் கட்ட மறுத்துள்ள Bernadette, அதற்கு பதிலாக ஒரு நாள் சிறைத்தண்டனையை அனுபவிக்கப்போவதாக கூறியுள்ளார்.

ஒரு நாள் மட்டும் தனது மதுபான விடுதியை மூடப்போவதாகவும், தான் எதற்காக விடுதியை மூடியுள்ளேன் என்பதை விளக்கும் ஒரு போர்டு வைக்கப்போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பொலிசில் புகாரளித்தவர்களை, தனது முகத்துக்கு நேராக குற்றம் சாட்ட தைரியமில்லாத கோழைகள் என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers