அனைவருக்கும் அடையாள அட்டை: சூரிச் புதிய திட்டம்

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

சூரிச்சில் வசிக்கும் அனைவருக்கும் அடையாள அட்டை வழங்கும் திட்டம் ஒன்றிற்கு ஆதரவாக சூரிச் நகர நாடாளுமன்றம் வாக்களித்துள்ளது.

நேற்றைய தினம், சட்ட விரோத புலம்பெயர்ந்தோர் உட்பட சூரிச்சில் வசிக்கும் அனைவருக்கும் அடையாள அட்டை வழங்கும் மசோதா ஒன்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

வலது சாரியினர், சுற்றுச்சூழல் அமைப்புகள் உட்பட பல அமைப்புகள் முன் வைத்த இந்த திட்டத்திற்கு 64 பேர் ஆதரவாகவும் 41 பேர் எதிராகவும் வாக்களித்தனர், 12 பேர் நாடாளுமன்றத்திற்கு வரவில்லை.

இந்த அடையாள அட்டை மக்கள் அதிகாரிகளுக்கு, முக்கியமாக பொலிசாருக்கு தங்கள் அடையாளத்தை தெரியப்படுத்துவதற்கு உதவும்.

நியூயார்க்கில் உள்ளது போலவே சூரிச்சிலும், கைது செய்யப்படுவோம் என்ற அச்சமின்றி, அரசு மற்றும் தனியார் சேவைகளை பயன்படுத்துவதற்கு இந்த அட்டை உதவ வேண்டும் என இத்திட்டத்தை ஆதரிப்போர் விரும்புகின்றனர்.

செப்டம்பரில் வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றில் சூரிச்சின் முனிசிபல் அலுவலர்கள் இத்திட்டத்தை எதிர்த்து வாக்களித்தனர்.

சட்டத்திற்கு விரோதமாக வெளிநாட்டவர்களுக்கு பாதுகாப்பு அளிப்பது போன்ற ஒரு மாயத்தோற்றத்தை உருவாக்குதல், சந்தேகத்திற்குரியதாக இருப்பதோடு, முறைப்படி பதிவு செய்யாத அகதிகளுக்கு பாதுகாப்பு இருப்பது போன்ற ஒரு பொய்யான உணர்வையும் அளித்து விடும் என்று அவர்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.

சூரிச்சில் முறைப்படி பதிவு செய்யாத அகதிகள் சுமார் 14,000 பேர் உள்ளனர். சூரிசைப் போன்றே பெர்ன் மற்றும் ஜெனீவாவும் அடையாள அட்டை வழங்கும் திட்டத்தை செயல்படுத்த திட்டமிட்டு வருகின்றன.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers