சுவிஸ் இளைஞர்களிடையே அதிகரிக்கும் மதுப்பழக்கம்: ஆய்வில் வெளியான தகவல்

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தில் ஒட்டுமொத்தமாக மதுப்பழக்கம் பெருமளவில் குறைந்து வருகிறது என்றாலும் இளம் பெண்களிடையே மதுப்பழக்கம் அதிகரித்து வருவதாக ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.

சுவிட்சர்லாந்தில் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்னர் பொதுமக்கள் தினசரி அருந்திய மதுவின் அளவைவிடவும் தற்போது மிகவும் குறைவாக பயன்படுத்துவதாக அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

கடந்த 1992 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு 5 ஆண்டுக்கும் ஒருமுறை சுவிஸில் மதுப்பழக்கம் தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதில் 20 சதவிகிதமாக இருந்த மது அருந்துவோர்களின் எண்ணிக்கை தற்போது 11 சதவிகிதமாக குறைந்துள்ளது என தெரியவந்துள்ளது.

இருப்பினும் சுவிஸ் மக்களில் 82 சதவிகிதம் பேர் தினசரி ஒரு கிண்ணமேனும் மது அருந்தும் பழக்கத்தை கடைபிடிக்கின்றனர்.

கடந்த ஆண்டு மேற்கொண்ட ஆய்வில் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் சுமார் 26 சதவிகிதம் பேர் தினசரி மது அருந்துவதாக குறிப்பிட்டுள்ளனர்.

ஆனால் 1992 ஆம் ஆண்டு இது 29 விழுக்காடாக இருந்தது. மட்டுமின்றி 34 வயதுக்கு உட்பட்டவர்களின் மதுப்பழக்கம் சமீப காலமாக அதிகரித்து வருவதாக இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

குறிப்பாக இளம் பெண்கள் மது அருந்துவதை வாடிக்கையாக வைத்துள்ளனர் எனவும்,

சில மணி நேரங்களில் பெண்கள் 4 கிண்ணம் வரையிலும், ஆண்கள் 5 கிண்ணம் வரையிலும் மது அருந்தும் அளவுக்கு அடிமையாக உள்ளதும் குறித்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

2007 ஆம் ஆண்டு 19 விழுக்காடாக இருந்த மது அருந்தும் இளைஞர்களின் எண்ணிக்கை 2017 ஆம் ஆண்டு 24 விழுக்காடாக அதிகரித்துள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers