வேலியே பயிரை மேய்ந்த கதை: பதவியை இழந்த பொலிஸ் அதிகாரி

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தில் பாலியல் பலாத்கார வழக்கில் சிக்கிய பொலிஸ் அதிகாரியின் பதவியை பறித்துள்ளனர்.

சுவிஸ்-ஜேர்மன் மாகாணம் ஒன்றில் பொலிஸ் அதிகாரியாக செயல்பட்ட நபர் ஒருவர் 16 வயது கொண்ட சிறுவனுடன் தொடர்ந்து பாலியல் உறவு வைத்துக் கொண்டுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பில் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், போதுமான ஆதாரங்களுடன் குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளதால் குறித்த பொலிஸ் அதிகாரிக்கு 15 மாத சிறையும், பதவியையும் பறித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

10 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த இச்சம்பவத்தில் இரண்டு ஆண்டுகள் விசாரணைக்கு பின்னரே தண்டனை விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

ஆனால் குறிப்பிட்ட நபரின் பதவியை பறித்த நிலையில், அவர் வேறு மாகாணம் ஒன்றில் குடியேறி மீண்டும் பொலிஸ் பணிக்கே திரும்பியுள்ளதாக கூறப்படுகிறது.

விசாரணை காலம் காலாவதியானது மற்றும் தனிப்பட்ட ஒருவரின் குற்றவியல் ஆவணங்கள் எதுவும் பொதுவெளியில் இல்லாதது உள்ளிட்ட காரணங்களால் அந்த பொலிஸ் அதிகாரி தண்டனையில் இருந்து தப்பியதாக கூறப்படுகிறது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers