மக்கள் வாழும் குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள பாலியல் விடுதி ஒன்றை அகற்ற கோரிய மக்களின் கோரிக்கையை சுவிட்சர்லாந்து நகரம் ஒன்றின் அதிகாரிகள் நிராகரித்துள்ளனர்.
சுவிட்சர்லாந்தின் வரலாற்றுச் சிறப்பு மிக்க Arbon நகரில் குடியிருப்புப் பகுதியில் ஒரு பாலியல் விடுதி அமைந்துள்ளது.
அங்கு மாலை நேரமானால் ஜன்னல் அருகே நிர்வாணமாக பெண்கள் நிற்பதாகவும், அந்த விடுதியிலிருந்து வரும் இசை தொந்தரவாக இருப்பதாகவும் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் புகாரளித்துள்ளனர்.
ஆனால் அவர்களது புகாருக்கு பதிலளித்துள்ள அதிகாரிகள், அந்த விடுதி, அது வழங்கும் விலைமதிப்பில்லா சேவை கருதி அகற்றப்படாது என்று தெரிவித்துள்ளனர்.
அந்த அமைப்பு அங்கு இருப்பதற்கு உரிமை இருக்கிறது, அது மக்களின் சமூகத் தேவைகளை சந்திக்கிறது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த பதில் சிலரை கோபப்படுத்தினாலும், மக்கள் ஏன் ஜன்னல் வழியாக அடுத்த வீட்டை எட்டிப் பார்க்கிறார்கள் என்று பலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
சுவிட்சர்லாந்தில் பாலியல் தொழில் சட்டப்பூர்வமானது மட்டுமல்ல, அது சேவைத் துறையாகவும் கருதப்படுவது குறிப்பிடத்தக்கது.