சுவிட்சர்லாந்தில் மொடலுக்கு நேர்ந்த பரிதாபம்: உதவ முடியாது என கைவிரித்த பொலிசார்

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தின் பிரபல மொடலும் இன்ஸ்டாகிராம் ஸ்டாருமான ஒரு இளம்பெண்ணின் வருமானத்திற்கு ஹேக்கர் ஒருவர் உலை வைத்துவிட்டார்.

சுவிட்சர்லாந்தின் Graubündenஐச் சேர்ந்த, 30,000 பேர் பின்பற்றும் இன்ஸ்டாகிராம் ஸ்டாரும் மொடலுமான Simona Sgier (25) தனது இன்ஸ்டாகிராம் இடுகைகளிலிருந்து வரும் வருமானத்தில்தான் வாழ்ந்து வந்தார்.

இந்நிலையில், ஒரு நாள் லிங்க் ஒன்று, அவரது இன்ஸ்டாகிராம் கணக்கு தொடர்பான தகவல்களை மறுபடியும் உள்ளிட வேண்டும் என கேட்டதையடுத்து அவரும் அவ்வாறே செய்தார்.

அவ்வளவுதான் அவரது இன்ஸ்டாகிராம் கணக்கு அவரது கட்டுப்பாட்டை இழந்து விட்டது, அதாவது ஹேக்கர் ஒருவரின் கைக்கு சென்று விட்டது.

அந்த ஹேக்கர் அவரது கணக்கையே நீக்கி விட்டார். இதனால் Simonaவின் வருமானத்துக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டுவரும் Graubünden பொலிசார், அவர்களால் பெரிதாக எதுவும் செய்யமுடியாது என்று கூறிவிட்டனர்.

சில நேரங்களில் ஹேக் செய்யப்பட்ட கணக்குகளை மீட்டுள்ளதாகக் கூறும் பொலிசார், இவ்வளவு அதிகமானோர் பின்பற்றும் கணக்கை மீட்பது கடினம் என்று கூறியுள்ளனர்.

பேக் அப்கள் உதவியால் தனது கணக்கு மீட்கப்படும் என நம்பும் Simona தற்போது உதவிக்காக இன்ஸ்டாகிராமின் உரிமையாளரான பேஸ்புக்கை தொடர்பு கொண்டுள்ளார்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்