அனாதையாக இறந்து கிடந்த பிஞ்சு குழந்தை: தாயார் என்ன செய்தார் தெரியுமா?

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தில் பெற்றோரின் அலட்சியத்தால் 23 மாத குழந்தை பரிதாபமாக மரணமடைந்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த விவகாரம் தொடர்பில் மண்டல நீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெற்றுள்ளது.

சுவிட்சர்லாந்தின் St. Gallen மண்டலத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு ஜூலை மாதம் குறித்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.

போதை மருந்து பழக்கத்திற்கு அடிமையான Jessica என்பவர் தம்மால் கவனித்துக்கொள்ள முடியாது என கூறி பிறந்த சில மாதங்களிலேயே குழந்தை ஜாஸ்மினாவை தங்களது சிறார் காப்பகத்தில் தினசரி ஒப்படைத்துவிட்டு வெளியே சென்று வந்துள்ளார்.

சம்பவத்தன்று 23 மாத குழந்தை ஜாஸ்மினாவை வழக்கம் போலவே சிறார் காப்பகத்தில் ஒப்படைத்துவிட்டு ஜெசிகா வெளியே சென்றுள்ளார்.

பலமணி நேரத்திற்கு பின்னர் குடியிருப்புக்கு திரும்பிய ஜெசிகா தமது மகளின் உயிரற்ற சடலத்தை கண்டுள்ளார்.

ஆனாலும், சிறார் காப்பகத்தில் இருந்து தமது பிஞ்சு மகளின் சடலத்தை கைப்பற்ற மறுத்து வந்துள்ளார் ஜெசிகா.

தொடர்ந்து சில நாட்கள் அந்த காப்பகத்திலேயே குழந்தையின் உடல் கேட்பாரற்று கிடந்துள்ளது. இதனால் அழுகும் நிலைக்கு தள்ளப்பட்டது.

கடும் வெப்ப காலமானதால் உடலின் சில பாகம் காய்ந்து போனதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனிடையே 6 நாட்களுக்கு பின்னர் மிகவும் சிதைந்துபோயுள்ள குழந்தை ஜாஸ்மினாவின் உடலை கையால் தள்ளப்படும் வண்டி ஒன்றில் எடுத்துச் சென்று பெட்டிக்குள் வைத்து சொந்த குடியிருப்பிலேயே மறைவு செய்துள்ளார்.

இதனிடையே ஆகஸ்டு மாதம் 4- ஆம் திகதி ஜெசிகாவின் கணவர் தேடும் போது ஜாஸ்மினாவின் சடலத்தை கண்டுபிடித்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பில் நடந்த விசாரணையில் ஜெசிகா பாலியல் தொழிலாளி என்பதும், போதை மருந்து பழக்கத்திற்கு அடிமையானவர் என்றும் அவரது கணவர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கின் விசாரணை மண்டல நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள நாட்களில் நடைபெற்று வரும் என தெரியவந்துள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers