சுவிட்சர்லாந்தில் ஆறு அகதிகளின் உயிரிழப்புக்கு காரணமாக இருந்தது சிகரெட்டா?

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தின் Solothurn நகரில் அகதிகள் தங்கியிருந்ததாக கருதப்படும் ஒரு அடுக்கு மாடிக் குடியிருப்பில் பற்றிய தீ, குழந்தைகள் உட்பட ஆறு பேரின் உயிரைக் குடித்த நிலையில், தீப்பிடித்ததற்கு காரணம் அணைக்கப்படாமல் வீசியெறியப்பட்ட ஒரு சிகரெட்டாக இருக்கலாம் பொலிசார் சந்தேகிக்கின்றனர்.

தீப்பிடித்த அந்த கட்டிடத்தில் இருபதுபேர் இருந்ததாகவும் பெரும்பாலோர் தீயணைப்புபடையினரால் மீட்கப்பட்டுவிட்டாலும் ஆறு பேரை மீட்க முடியாமல் போனதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும், காயமடைந்த நான்கு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இறந்தவர்களின் உடலை அடையாளம் காணும் முயற்சியில் பொலிசார் ஈடுபட்டுள்ளனர்.

அந்த கட்டிடத்தின் கீழ்பகுதியில் தீப்பிடித்ததால் அந்த தளத்தில் இருந்தவர்களை மட்டும் காப்பாற்ற இயலாமல் போய்விட்டதாக தெரிகிறது.

அவர்கள் ஆறு பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது. உயிரிழந்தவர்கள் யார் என்றோ, எத்தனை குழந்தைகள் இறந்தனர் என்பதையோ பொலிஸ் செய்தி தொடர்பாளர் தெரிவிக்காவிட்டாலும், அக்கம்பக்கத்தில் வசித்தவர்கள், அந்த வீட்டில் வசித்தவர்கள் அகதிகள் என்றும், பெரும்பாலும் எரித்ரியாவைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்றும் தெரிவித்தனர்.

அந்த கட்டிடம் தீப்பிடித்ததற்கான காரணம் இதுவரை தெரியவில்லை.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers