சுவிஸ் பாதுகாவலரை வம்புக்கிழுத்த குட்டிப்பையன்: பார்த்து ரசித்த பிரபலம்

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

போப்பின் சுவிஸ் பாதுகாவலர் ஒருவரை அவரது கண்களுக்கு முன்னேயே ஒரு குட்டிப்பையன் வம்புக்கிழுக்க, அவரோ கோபித்துக் கொள்ளாமல் அவனைப் பார்த்து ரசித்து சிரித்தார்.

இந்த சுவாரஸ்ய சம்பவம் வாட்டிகனில் நடந்தது. போப்பின் பாதுகாப்புக்கு சுவிஸ் பாதுகாவலர்கள்தான் பொறுப்பு என்பதை பலரும் அறிவர்.

இந்நிலையில், போப் உரையாற்றிக் கொண்டிருந்த ஒரு கூட்ட மேடையில், அவரது பாதுகாப்புக்கு நின்று கொண்டிருந்த ஒரு சுவிஸ் பாதுகாவலரின் சட்டையைப் பிடித்து ஒரு குட்டிப்பையன் இழுத்ததோடு போப் அமர்ந்திருந்த சேருக்குப் பின் போய் உட்கார்ந்து கொண்டான்.

பதறிப்போன அந்த சிறுவனின் தாய் வந்து போப்பிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டதோடு, அவனால் பேச இயலாது என்று கூற, இன்னொரு பக்கம் பாதுகாவலர்கள் அந்த சிறுவனை தங்களிடம் அழைக்க, கூட்டம் போப் என்ன சொல்வாரோ என்று அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தது.

போப்போ புன்னகையுடன், அவனால் பேச முடியாமல் இருக்கலாம், ஆனால் அவனால் மற்றவர்களுடன் தொடர்பு கொள்ள முடிகிறது என்று கூறியதுடன், அவன் சுதந்திரமாக இருக்கிறான், அதோடு என்னை சிந்திக்கத் தூண்டுகிறான், நானும் கடவுள் முன்பு சுதந்திரமாக இருக்கிறேனா? என்று கேட்க, கூட்டம் நெகிழ்ந்து போனது.

பின்னர் அந்த குழந்தைக்காக பிரார்த்தனை செய்த போப், அவனுக்கு பேச்சு வரவேண்டும் என்று கடவுளிடம் வேண்டிக் கொள்வோம் என்றார்.

பொதுவாக போப் பேசுகிறார் என்றால், பொதுமக்கள் கவனம் முழுவதும் அவர்மீதுதான் இருக்கும், ஆனால் அந்த குட்டிப் பையன் அனைவர் கவனத்தையும் தன்பால் ஈர்த்ததோடு, அவரது ஆசியையும் பெற்று கொண்ட சம்பவம் பெரிதும் கவனம் ஈர்த்துள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers