ஒரே ஒரு கழிப்பறையும் மூடப்பட்டிருந்தது: ரயிலில் பெண் பயணி செய்த அதிர்ச்சி செயல்

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தில் பயணி ஒருவர் ரயிலில் இருந்த ஒரே ஒரு கழிப்பறையும் மூடப்பட்டிருந்ததால், கழிப்பறைக்கு வெளியே சிறுநீர் கழித்த சம்பவம் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

சுவிட்சர்லாந்தில் பெண்மணி ஒருவர் Baden பகுதியில் இருந்து Langenthal-கு S23 ரயிலில் பயணம் மேற்கொண்டுள்ளார்.

இந்த நிலையில் இவருக்கு சிறுநீர் கழிக்கும் அவசரம் ஏற்பட்டுள்ளது. ஆனால் அந்த ரயிலில் ஒரே ஒரு கழிப்பறை வசதி மட்டுமே இருந்துள்ளது.

மட்டுமின்றி இவர் செல்லும்போது அந்த கழிப்பறையும் மூடப்பட்டு இருந்துள்ளது.

இவருக்கு மிக அவசரம் என்பதால் அந்த கழிப்பறையின் வெளியே சிறுநீர் கழிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

இதனிடையே திடீரென்று திறந்த அந்த கழிப்பறையில் இருந்து வெளியே வந்த பெண்மணி ஒருவர், கழிப்பறை பயன்படுத்தும் வகையில் இல்லை, தாம் உள்ளே சென்று மிகவும் பிரயாசைப்பட்டதாகவும் இவரிடம் தெரிவித்துள்ளார்.

கடந்த நவம்பர் 24 ஆம் திகதி இச்சம்பவம் நடந்துள்ளது. மட்டுமின்றி குறித்த ரயிலில் ஒரே ஒரு கழிப்பறை இருப்பதை ரயில் நிர்வாகமும் உறுதி செய்துள்ளது.

மேலும், அது ஆர்கானிக் கழிப்பறை எனவும் சில பேர் பயன்படுத்திய பின்னர் தானாகவே மூடிக்கொண்டு சில நிமிடங்களில் மீண்டும் திறக்கும் எனவும் நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.

சுவிஸ் ரயில்களில் கழிப்பறை பிரச்னை மிக அதிகம் என்பதே ஒட்டுமொத்த பயணிகளின் குற்றச்சாட்டாக உள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers